சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி சன் டிவிக்கு தண்ணிகாட்டி வரும் ஒரு சேனல் என்றால் அது விஜய் டிவி தான். சன் டிவி சீரியல்களுக்கு நிகராக மக்கள் விஜய் டிவி சீரியல்களையும் விரும்பிப் பார்க்க தொடங்கிவிட்டனர். இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 25வது வாரத்திற்கான டாப் 5 விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
24
டிஆர்பியில் சரிவை சந்தித்த மகாநதி
விஜய் டிவியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியலில் லட்சுமிப்பிரியா, ஆதிரை ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் 5.48 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 5.25 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த சீரியலின் திடீர் சரிவுக்கு அதில் நடந்த அதிரடி மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில் அந்த சீரியலில் கடந்த வாரம் வரை யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆதிரை திடீரென விலகியதால் அவருக்கு பதில் தற்போது ஸ்வேதா என்பவரை மாற்றி உள்ளனர். ஆதிரையின் விலகலால் அவரது ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். அதன்காரணமாகவே டிஆர்பி ரேட்டிங்கும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியல் ஐந்தாம் இடத்தில் உள்ளது
34
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் சின்ன மருமகள் டிஆர்பி நிலவரம் என்ன?
நவீன் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியலான சின்ன மருமகள் இந்த வாரமும் நான்காம் இடத்தில் தான் உள்ளது. கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் டிஆர்பி ரேஸில் சரிவை சந்தித்து உள்ளது சின்ன மருமகள் சீரியல். அதன்படி கடந்த வாரம் 6.72 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் 6.20 டிஆர்பி மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் 6.87 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 6.58 புள்ளிகளுடன் அதே இடத்தை தக்கவைத்து உள்ளது.
வழக்கம் போல் சிறகடிக்க ஆசை மற்றும் அய்யனார் துணை ஆகிய சீரியல்கள் தான் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதில் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தைவிட கூடுதலாக டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 7.62 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் 7.78 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் முதலிடத்தில் உள்ள சிறகடிக்க ஆசை சீரியலும் டிஆர்பியில் முன்னேறி உள்ளது. கடந்த வாரம் இந்த சீரியலுக்கு 7.87 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் 8.05 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.