Mahanadhi : மகாநதி சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை - இனி இவருக்கு பதில் இவரா?

Published : Jul 01, 2025, 07:46 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர் திடீரென அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

PREV
15
Vijay TV Mahanadhi Serial Update

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி என பல சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியவர் பிரவீன் பென்னட். அவர் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி. இந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தந்தை இழந்த நான்கு சகோதரிகளின் கதை தான் இந்த மகாநதி. இந்த சீரியலில் தந்தையாக நடிகர் சரவணன் நடித்திருந்தார். இந்த சீரியலை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

25
டிஆர்பியில் கலக்கும் மகாநதி சீரியல்

மகாநதி சீரியலில் கதையின் நாயகியாக லட்சுமிப் பிரியா நடித்துள்ளார். அவர் காவேரி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது தங்கையாக கங்கா ரோலில் பிரதீபாவும், யமுனா ரோலில் ஆதிரையும், நர்மதாவாக காவ்யாவும் நடித்து வந்தனர். அதேபோல் இந்த சீரியலின் நாயகனாக ஸ்வாமிநாதன் ஆனந்தராமன் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்று வரும் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் டிஆர்பி ரேஸிலும் மகாநதி சீரியல் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து அசத்தி உள்ளது.

35
மகாநதி சீரியலில் நடக்கும் மாற்றம்

மகாநதி சீரியலில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரதீபா தனது கேரக்டருக்கு பெரியளவில் ஸ்கோப் இல்லாத காரணத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதில் திவ்யா கணேசன் அந்த ரோலை ஏற்று நடித்து வருகிறார். அதன்பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் திவ்யா கணேசனும் மகாநதி சீரியலை விட்டு கடந்த ஆண்டு விலகிய நிலையில், அவருக்கு பதில் தரணி என்பவர் நடித்து வருகிறார்.

45
மகாநதி சீரியலில் இருந்து விலகிய ஆதிரை

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை மகாநதி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அந்த சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆதிரை தான் தற்போது அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார். போதிய அளவில் ஸ்கிரீன் ஸ்பேஸ் இல்லாத காரணத்தால் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் யார் யமுனா ரோலில் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. லேட்டஸ்ட் தகவலின்படி ஸ்வேதா என்பவர் அவருக்கு பதில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
யார் இந்த ஆதிரை?

ஆனால் மகாநதி சீரியல் குழு இதுவரை அவருக்கு பதில் யார் நடிக்க உள்ளார் என்பதை அறிவிக்கவில்லை. யமுனா ரோலில் நடித்து வந்த ஆதிரை சினிமாவிலும் நடித்திருக்கிறார். அவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பின்னர் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்து மகாநதி சீரியலில் நடித்து வந்த ஆதிரைக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. தற்போது அவரின் திடீர் முடிவால் மகாநதி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories