
சினிமாவை போல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சினிமாவின் வெற்றி - தோல்வியை அதன் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் தீர்மானிப்பதை போல் சின்னத்திரை சீரியல்கள் வெற்றி - தோல்வியை அதன் டிஆர்பி ரேட்டிங் தான் தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரம் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியிடப்படும். அதன்படி 2025-ம் ஆண்டின் 23வது வாரத்திற்கான சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த வாரமும் சன் டிவிக்கு செம டஃப் கொடுத்துள்ளது விஜய் டிவி சீரியல்கள்.
சன் டிவியில் மனிஷா மகேஷ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 9.36 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.17 டிஆர்பி ரேட்டிங் மட்டுமே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான மூன்று முடிச்சு தான் இந்த வாரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஸ்வாதி கொண்டே நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலுக்கு இந்த வாரம் 8.92 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. கடந்த வாரத்தை காட்டிலும் இது கம்மி தான். கடந்த வாரம் மூன்று முடிச்சு சீரியல் 9.00 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்தது.
சஞ்சீவ், சைத்ரா ரெட்டி நடிப்பில் சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் மூன்றாம் இடத்திலேயே நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு 8.32 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் கயல் சீரியலின் டிஆர்பி சரிவை சந்தித்து இருக்கிறது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை, இந்த வாரம் நான்காம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி இருக்கிறது. இந்த சீரியலுக்கு 7.78 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் இதற்கு 7.47 டிஆர்பி மட்டுமே கிடைத்திருந்தது.
சன் டிவியில் கேபிரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 5ம் இடத்தை பிடித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் கடந்த வாரம் 7.53 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் 7.32 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது,
விஜய் டிவியில் மதுமிதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ஆறாம் இடத்திலேயே நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 7.38 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் வெறும் 7.11 டிஆர்பி புள்ளிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது.
சன் டிவியின் அன்னம் சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் மளமளவென முன்னேறி இருக்கிறது. கடந்த வாரம் 9வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 7ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 6.97 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் அன்னம் சீரியலுக்கு 6.79 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருந்தன.
சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் வேல ராமமூர்த்தி, பார்வதி, ஹரிப்பிரியா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது. கடந்த வாரம் 7ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு 6.96 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது. அந்த சீரியல் கடந்த வாரம் 8ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு 6.77 டிஆர்பி புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு 6.98 புள்ளிகள் கிடைத்திருந்தது.
கார்த்திக் ராஜ் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் 10 இடத்தை தக்க வைத்து உள்ளது. இந்த சீரியலுக்கு 5.83 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இது கடந்த வாரத்தை விட கம்மியாகும். கடந்த வாரம் இந்த சீரியலுக்கு 6.13 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.