சன் டிவி சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக ஏராளமான சீரியல்களும் தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகின்றன. சில சீரியல்களுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். சில சமயங்களில் மகா சங்கமம் என இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைத்து ஒரு மணிநேர ஸ்பெஷலாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
விஜய் டிவி தான் இந்த மகா சங்கமம் டிரெண்டை துவக்கி வைத்தது. தற்போது சன் டிவியும் அந்த டிரெண்டில் இணைந்துள்ளது. சன் டிவியின் மருமகள், மூன்று முடிச்சு ஆகிய சீரியல்களின் மகா சங்கமம் கடந்த வாரம் ஒளிபரப்பானது.
24
சன் டிவி சீரியல் நேரம் மாற்றம்
இந்த நிலையில், சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களாக இருக்கும் சிங்கப்பெண்ணே மற்றும் எதிர்நீச்சல் 2 ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிங்கப்பெண்ணே தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்கவைத்து தமிழ்நாட்டின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் மனிஷா மகேஷ் நாயகியாக நடிக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதேபோல் இந்த சீரியல் காலை 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டு வந்தது. அந்த மறு ஒளிபரப்பு நேரத்தை தான் தற்போது மாற்றி இருக்கிறார்கள். அதன்படி சிங்கப்பெண்ணே சீரியல் இனி காலை 10.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
34
எதிர்நீச்சல் 2 சீரியலின் டைமிங் மாற்றம்
அதேபோல் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் கடந்த ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இரவு 9.30 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த சீரியலின் மறு ஒளிபரப்பு காலை 11 மணிக்கு இருந்த நிலையில், இனி எதிர்நீச்சல் 2 சீரியல் காலை 8.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். எதிர்நீச்சல் 2 சீரியல் தற்போது டிஆர்பியில் படிப்படியாக முன்னேறி வருகிறது.
சிங்கப்பெண்ணே மற்றும் எதிர்நீச்சல் 2 ஆகிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தை சன் டிவி மாற்றியதற்கு முக்கிய காரணம் நந்தினி சீரியல். சன் டிவியில் ஒரு காலத்தில் சக்கைப்போடு போட்ட இந்த சீரியலை, தற்போது மீண்டும் ஒளிபரப்பி வருகிறார்கள். காலை 9.30 மணி முதல் 11 மணி வரை நந்தினி சீரியல் ஒளிபரப்பாவதால் சிங்கப்பெண்ணே மற்றும் எதிர்நீச்சல் 2 சீரியல்களின் மறு ஒளிபரப்பு நேரத்தை மாற்றி இருக்கிறார்கள்.