குக் வித் கோமாளிக்கு போட்டியாக வரும் டாப் குக்கு டூப் குக்கு 2; லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்

Published : Jun 16, 2025, 02:33 PM IST

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
Top Cooku Dupe Cooku Season 2

விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இதனால் அந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது அந்நிகழ்ச்சியின் 6வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பற்றிய அப்டேட் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

24
டாப் குக்கு டூப் குக்கு இரண்டாவது சீசன்

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி கடந்த ஆண்டு தான் சன் டிவியில் தொடங்கப்பட்டது. வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இதன் முதல் சீசன் வேறலெவல் ஹிட் அடித்தது. இந்த சீசனில் நரேந்திர பிரசாத் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளதாம்.

34
டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 போட்டியாளர்கள் யார்?

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வேல ராமமூர்த்தி மற்றும் பார்வதி ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளார்களாம். இதுதவிர நடிகை இனியா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை காட்ட தயாராகி வருகிறாராம். இவர்களுடன் பாடகர் உன்னி கிருஷ்ணனும் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளாராம்.

44
லீக்கான போட்டியாளர் லிஸ்ட்

மேலும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் போட்டியாளராக களமிறங்க உள்ளாராம். இதுதவிர சன் டிவி சீரியல் நடிகர் நந்தன் மற்றும் மருமகள் சீரியல் ஹீரோயின் கேப்ரியல்லா ஆகியோரும் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்டில் இடம்பெற்று உள்ளனர். இதுதவிர சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷாலும் இதில் கலந்துகொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்த உள்ளாராம். இவர்களுடன் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒரு போட்டியாளராக களமிறங்க இருக்கிறாராம். விரைவில் இந்நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories