சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வாரத்தின் ஏழு நாட்களும் சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பியை அள்ளி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் முழுக்க முழுக்க சிறப்பு நிகழ்ச்சிகளும், புதுப் படங்களும் தான் ஒளிபரப்புவார்கள். ஆனால் தற்போது சிறப்பு நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக சீரியல்களையே ஒளிபரப்புகிறார்கள். அந்த அளவுக்கு சீரியல்களுக்கு டிமாண்ட் அதிகரித்துவிட்டது.
25
சினிமா பிரபலங்களை கவரும் சீரியல்கள்
சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் பரவலாக ரீச் ஆனதற்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களம் தான். சினிமாவுக்கு நிகராக அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை மக்களிடையே தூண்டும் விதமான திரைக்கதையுடன் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருவதால் அதை குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி பார்க்கத் தொடங்கி விட்டனர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சினிமா நட்சத்திரங்களும் சன் டிவி சீரியல்களுக்கு ஃபேன் ஆக இருக்கின்றனர்.
35
நயன்தாரா பேவரைட் சீரியல்
அந்த வகையில் நடிகை நயன்தாராவும் சன் டிவி சீரியல் ஒன்றை மிகவும் விரும்பி பார்ப்பாராம். அது என்ன சீரியல் என்கிற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அது வேறெதுவுமில்லை, சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை தான் விரும்பி பார்ப்பாராம். சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர், ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள இந்த சீரியல் தான் நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
இதன் காரணமாக ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணாம பார்த்துவிடுவாராம் நயன்தாரா. கயல் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்கள் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக டிஆர்பியிலும் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. கயல் சீரியலை நடிகை நயன்தாரா விரும்பி பார்க்கிறார் என்கிற தகவல் அந்த சீரியல் குழுவினரையும் குஷியாக்கி உள்ளதாம்.
55
நயன்தாரா கைவசம் உள்ள படங்கள்
நடிகை நயன்தாரா தற்போது பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இதுதவிர டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் நடிக்கிறார் நயன். மேலும் மண்ணாங்கட்டி, ராக்காயி, தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஒரு படம், மலையாளத்தில் நிவின் பாலி உடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்கிற திரைப்படம் என செம பிசியான நடிகையாக வலம் வருகிறார் நயன்.