Serial : டாப் கியரில் அய்யனார் துணை; சிங்கப்பெண்ணே சீரியலுக்கு ஆப்பு! இந்த வார டாப் 10 பட்டியலில் ட்விஸ்ட்

Published : Jun 26, 2025, 03:03 PM IST

சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை இழந்துள்ள நிலையில், விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்து மாஸ் காட்டி உள்ளது.

PREV
111
Top 10 Tamil Serial TRP Rating

சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக தான் தற்போது வாரத்தின் 7 நாட்களும் சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிப்பார்கள். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 24வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் டாப் 10 பட்டியலில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. எந்தெந்த சீரியலுக்கு என்னென்ன இடம் கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.

211
1. மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமம்

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் தான் கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் அந்த சீரியலை பின்னுக்கு தள்ளி, மூன்று முடிச்சு, மருமகள் தொடர்களின் மகா சங்கமம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல்கள் 9.80 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதில் மருமகள் சீரியலில் கேப்ரியல்லாவும், மூன்று முடிச்சு சீரியலில் ஸ்வாதி கொண்டேவும் நாயகிகளாக நடித்துள்ளனர். கடந்த வாரம் முதல் இந்த மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.

311
2. சிங்கப்பெண்ணே

மனிஷா மகேஷ் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியல் தான் சிங்கப்பெண்ணே. கடந்த வாரம் 9.36 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.63 டிஆர்பி புள்ளிகள் பெற்றும் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. இந்த சீரியலுக்கு இந்த வாரம் இரண்டாம் இடம் தான் கிடைத்துள்ளது.

411
3. கயல்

சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சக்சஸ்புல் சீரியல் தான் கயல். இந்த சீரியலில் சஞ்சீவ்வும், சைத்ரா ரெட்டியும் ஜோடியாக நடித்துள்ளனர். கடந்த வாரத்தை போல் இந்த வாரம் மூன்றாம் இடத்திலேயே நீடிக்கிறது கயல் சீரியல். கடந்த வாரம் 8.32 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் 9.27 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது.

511
4. சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது. வெற்றி வசந்த் மற்றும் கோமதிப்பிரியா நடிப்பில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 7.78 டிஆர்பி புள்ளிகள் பெற்றிருந்தது. ஆனால் இந்த வாரம் அந்த சீரியலுக்கு 7.87 புள்ளிகள் கிடைத்துள்ளன.

611
5. அய்யனார் துணை

டிஆர்பி ரேஸில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு செம டஃப் கொடுக்கும் சீரியலாக அய்யனார் துணை சீரியல் மாறி உள்ளது. மதுமிதா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 7.11 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் 7.62 டிஆர்பி ரேட்டிங் பெற்றும் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

711
6. எதிர்நீச்சல் தொடர்கிறது

திருச்செல்வம் இயக்கத்தில் வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, கனிகா, ஹரிப்பிரியா ஆகியோர் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 6.96 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் மளமளவென முன்னேறி 6ம் இடத்துக்கு வந்துள்ளதோடு 7.50 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

811
7. அன்னம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் கடந்த வாரம் 6.97 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் இருந்தது. இந்த வாரம் இந்த சீரியலுக்கு 7.49 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருந்தும் அதே 7ம் இடத்தில் தான் நீடிக்கிறது. அன்னம் சீரியலை விட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 0.1 புள்ளி அதிகம் வாங்கியதால் 6ம் இடம் மிஸ் ஆகிவிட்டது.

911
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் ஸ்டாலின், நிரோஷா, வெங்கட் ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் கடந்த வாரம் 6.77 டிஆர்பி புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8ம் இடத்தை பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.87 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

1011
9. சின்ன மருமகள்

விஜய் டிவியில் நவீன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சின்ன மருமகள். இதில் பிக்பாஸ் தாமரைச் செல்வியும் நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த வாரம் டாப் 10 பட்டியலிலேயே இடம்பெறவில்லை. ஆனால் இந்த வாரம் டிஆர்பியில் அடிச்சு தூக்கி 6.72 புள்ளிகளுடன் 9ம் இடத்தை பிடித்து மாஸ் காட்டி உள்ளது.

1111
10. இராமாயணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புராண கதையம்சம் கொண்ட டப்பிங் தொடரான இராமாயணம் இந்த வாரம் 10ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 5.52 புள்ளிகளுடன் 12ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.01 டிஆர்பி ரேட்டிங் பெற்று 10ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 10ம் இடத்தில் இருந்த கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரம் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories