திருமணத்தில் கண்ணன் செயலை பெரிதாகியதால், ஒற்றுமையாக இருந்த 'பாண்டியன் ஸ்டோர்' குடும்பம் தற்போது சில்லு சில்லாக சிதறி போய்விட்டது. மீனாவின் தங்கை திருமணத்தின் போது, கையில் காசு இருக்கு என்பதால் கண்ணன் - கதிர் ஆகியோர் தனித்தனியாக மொய் வைத்தனர். மேலும் பாண்டியன் ஸ்டோர், பெயரில் மொய் வைக்க கூறி... மூர்த்தி கொடுத்த பணத்தை கண்ணன் தனம் - மூர்த்தி என்கிற பெயரில் மோய் வைத்து விட, ஜீவா - மீனா பெயர்,மொய் லிஸ்டில் பெயர் இல்லாமல் போகிறது.