சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று. திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது தர்ஷனின் திருமணம் விவகாரம் தான் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தர்ஷன் - பார்கவி ஜோடியை பிரித்துவிட்ட ஆதி குணசேகரன், அன்புக்கரசி உடன் தர்ஷனுக்கு திருமணம் செய்வதற்கான வேலைகளை பார்த்து வருகிறார். மறுபுறம் தர்ஷனையும், பார்கவியையும் சேர்க்கும் முயற்சியில் ஈஸ்வரி, ஜனனி, நந்தினி ஆகியோர் இறங்கி இருக்கிறார்கள். இதில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
24
ஈஸ்வரியிடம் ஃபீல் பண்ணிய தர்ஷன்
தர்ஷன் - பார்கவி பெயரில் பத்திரிகை வாங்க சென்ற ஜனனிக்கு போன் போட்டு பேசும் ஈஸ்வரி, தன்னிடம் வந்து தர்ஷன் ஃபீல் பண்ணிய விஷயத்தை சொல்கிறார். மேலும் கடைசியாக ஒருமுறை பார்கவியிடம் பேச தர்ஷன் ஆசைப்பட, ஈஸ்வரியும் ஜீவானந்தத்திற்கு போன் போட்டு பார்க்கிறார். ஆனால் ஜீவானந்தம் தான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுகிறார். இதனால் ஜீவானந்தத்தை தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. அதேபோல் வீட்டில் திருமணத்திற்காக பூஜை ஏற்பாடுகள் நடைபெறுவதையும் ஜனனியிடம் போட்டுடைக்கிறார் நந்தினி.
34
பார்கவியை கனடா அனுப்ப முடிவு செய்யும் ஜீவானந்தம்
மறுபுறம் ஜீவானந்தம் ஜனனியை அழைத்துக் கொண்டு கும்பகோணம் செல்கிறார். அங்கு பார்கவியின் தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அங்கு தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு பார்கவியை அழைத்து செல்லும் ஜீவானந்தம், அவர் நல்ல படிப்பவர் என்பதால் அவரை கனடாவுக்கு அனுப்பி படிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறுகிறார். பார்கவிக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அவரை கனடா அனுப்பி படிக்க வைக்க முயலும் ஜீவானந்தத்தின் முடிவு கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரன் களத்தில் இறங்கி வேலைகளை தொடர்கிறார். அதேநேரத்தில் ஈஸ்வரி, ஜனனி, நந்தினி ஆகியோர் எப்படியாவது தர்ஷனை பார்கவி உடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என முடிவெடுத்து அதற்கான வேலைகளை சைலண்டாக செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஜீவானந்தம் பார்கவியை கனடா அனுப்ப முடிவெடுத்துள்ளது ஈஸ்வரி, ஜனனி ஆகியோருக்கு எப்படி தெரியவரும்? அவர்கள் பார்கவி கனடா செல்வதை தடுப்பார்களா? தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும்? என்கிற கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.