சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என சொல்லும் அளவுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல சூப்பர் ஹிட் தொடர்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது. இதன் காரணமாகவே டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சீரியல்களிலும் சன் டிவி தான் டாப்பில் உள்ளது. அதில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்கள் தான் டிஆர்பி ரேஸில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்த சீரியல்களெல்லாம் புதிதாக தொடங்கப்பட்டவை. இந்த நிலையில், சன் டிவியின் சீரியல் ஒன்றிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் அது விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
24
ரசிகர்களை கதறவிடும் சன் டிவி சீரியல் எது?
இப்படி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் சீரியல் வேறெதுவுமில்லை, சன் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான். இந்த சீரியல் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் சைத்ரா ரெட்டி கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத சீரியலாக இருந்ததால் ஆரம்பத்தில் கயலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததால். ஆனால் போகப்போக கதையை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் இந்த சீரியல் திக்கு முக்காடி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
34
டிஆர்பியிலும் பின்னடைவை சந்தித்த கயல்
கயல் சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களாக மூன்றாவது இடத்திலேயே நீடித்து வந்த கயல் சீரியல், கடந்த வாரம் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன்மூலம் ரசிகர்களிடையே அந்த சீரியலுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. சமீபத்தில் விஜய் டிவி கூட ஐந்து ஆண்டுகளாக வெற்றிநடைபோட்டு வந்த பாக்கியலட்சுமி சீரியலுக்கு கடந்த சில மாதங்களாக வரவேற்பு இல்லாததால் அதை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்தது. அதேபோல் கயல் சீரியலையும் முடிவுக்கு கொண்டுவருமாறு ரசிகர்கள் கெஞ்சுகிறார்கள்.
குறிப்பாக கயல் சீரியலின் புரோமோவை இன்று யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருந்தது சன் டிவி. அந்த புரோமோவின் கீழ் குவிந்துள்ள கமெண்டுகள் பெரும்பாலானவை, இந்த சீரியலின் கிளைமாக்ஸ் புரோமோ எப்போ வரும் என்பது தான். அதில் ஒருவர், மூர்த்தி கேரக்டர் சாவடிச்சு கதைய முடிங்கடா என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். மற்றொரு கமெண்டில் தயவுசெய்து எப்படியாவது இந்த நாடகத்தை முடிக்கவும் நாடகத்துல பிரச்சனை இருக்கும்... ஆனால் பிரச்சனையே ஒரு நாடகமாக எடுத்துள்ளார் இந்த டைரக்டர் சார் என கதறி இருக்கிறார். இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவருமாறு பலர் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு சன் டிவி செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.