விஜய் டிவியில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அந்த சீரியலின் கிளைமாக்ஸ் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆகஸ்ட் 9-ந் தேதியுடன் பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைய உள்ளது. அதன்பின்னர் மற்ற சீரியல்களில் நேரமும் மாற்றப்பட இருக்கிறதாம். குறிப்பாக விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களான மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் அய்யனார் துணை ஆகியவற்றின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற உள்ளார்களாம்.
24
மகாநதி சீரியல் நேரம் மாற்றம்
பிரவீன் பென்னட் இயக்கத்தில் சுவாமி, லட்சுமி பிரியா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான மகாநதி, தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம். இதற்கு முன்னர் பாக்கியலட்சுமி சீரியல் தான் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. அதற்கு பதிலாக மகாநதி சீரியல் 7 மணிக்கு மாற்றப்பட உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் 7 மணிக்கு மாற்றப்பட்ட பின்னர் அதன் டிஆர்பி சரிந்தது, மகாநதி சீரியலுக்கும் அதே நிலை ஏற்படுமா என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
34
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டைமிங் என்ன?
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த சீரியல் தற்போது இரவு 8 மணிமுதல் 8.30 மணிவரை ஒளிபரப்பாகி வருகிறது. ஆகஸ்ட் 11ந் தேதி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இரவு 7.30 மணிமுதல் 8.15 மணிவரை 45 நிமிட ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளதாம். புது சீரியல் வரும் வரை இந்த சீரியல் 45 நிமிடம் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் 30 நிமிட சீரியலாகவே இது ஒளிபரப்பாகக்கூடும். இந்த நேர மாற்றத்தால் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் சரிய வாய்ப்பு உள்ளது.
விஜய் டிவியில் தற்போது சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் என்றால் அது அய்யனார் துணை தான். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரவு 8.30 மணிக்கு மாற்றப்பட்ட பின்னர் தான் அதன் டிஆர்பி ரேட்டிங்கும் எகிற ஆரம்பித்தது. இந்த நிலையில், அந்த சீரியல் டைமிங்கும் மாற இருக்கிறது. அதன்படி தற்போது 8.30 மணி முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ஆகஸ்ட் 11ந் தேதி முதல் 8.15 மணி முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்த சீரியலும் 45 நிமிட ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளதாம். இதனால் இதன் டிஆர்பியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.