ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் விஜய் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Jul 28, 2025, 11:32 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரண்டு சூப்பர் ஹிட் தொடர்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ள தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

PREV
14
2 Vijay TV Serials End On Same Day

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் என்றிருந்த நிலை தற்போது மாறிவிட்டது. அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக சீரியல்களை அதிகளவில் ஒளிபரப்பி வருகிறார்கள். சன் டிவிக்கு டிஆர்பி ரேஸில் செம டஃப் கொடுத்து வருவது விஜய் டிவி சீரியல்கள் தான். அப்படி விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வந்த இரண்டு முக்கிய சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளன. அதுவும் அந்த இரண்டு சீரியல்களில் கடைசி இரண்டு வார எபிசோடு ஒளிபரப்பாக உள்ளதாகவும் அறிவித்துவிட்டனர். அது என்னென்ன சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.

24
தங்கமகள்

விஜய் டிவியில் இன்னும் இரண்டு வாரத்தில் முடிவடைய உள்ள சீரியல்களில் தங்கமகள் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. இதில் மயில்சாமியின் மகன் யுவன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடித்திருந்த இந்த தொடரை ஹரிஷ் ஆதித்யா என்பவர் இயக்கி வந்தார். இந்த சீரியல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலுக்கு பெரியளவில் டிஆர்பி கிடைக்காததால் இதனை முடிவுக்கு கொண்டு வர உள்ளனர். தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் தங்கமகள் சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சீரியலின் கிளைமாக்ஸ் அடுத்த இரண்டு வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

34
பாக்கியலட்சுமி

விஜய் டிவி எண்டு கார்டு போட உள்ள மற்றொரு சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிவசேகர் மற்றும் டேவிக் இயக்கிய இந்த தொடர், 1500 எபிசோடுகளையும் தாண்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் பாக்கியாவாக சுசித்ராவும், கோபியாக சதீஷும், ராதிகாவாக ரேஷ்மாவும் நடித்திருந்தனர். இந்த சீரியல் விஜய் டிவியின் இரவு நேர பிரைம் டைம் சீரியலாக இருந்ததால் இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியல் டிஆர்பி ரேஸிலும் நம்பர் 1 இடம்பிடித்து அசத்தி இருந்தது. இந்த நிலையில், திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ள தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

44
பாக்கியலட்சுமி சீரியல் பின்னடைவை சந்தித்தது ஏன்?

பாக்கியலட்சுமி சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வரை அதற்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த சீரியலுக்கு பதில் அய்யனார் துணை சீரியலை 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்துவிட்டு, பாக்கியலட்சுமி சீரியலை இரவு 7 மணிக்கு மாற்றினர். இந்த நேர மாற்றத்திற்கு பின்னர் டிஆர்பியில் அதள பாதாளத்துக்கு சென்றது பாக்கியலட்சுமி சீரியல். அதன் காரணமாக தற்போது அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளனர். அந்த சீரியல் வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி உடன் முடிவடையும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories