சன் டிவியில் கோலங்கள் போன்ற மெகா ஹிட் தொடர்களை இயக்கியவர் திருச்செல்வம். இவர் இயக்கத்தில் சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் நான்கு சிங்கப்பெண்களை பற்றிய கதையாக இதை எடுத்திருந்தார். இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ஆகியோர் கதையின் நாயகியாக நடித்திருந்தனர். மேலும் இதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். அவர் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டர் ஆடியன்ஸ் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அதற்கு முக்கிய காரணம் மாரிமுத்துவின் நடிப்பு தான். அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
24
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
இரண்டு ஆண்டுகளாக வெற்றிநடைபோட்டு வந்த எதிர்நீச்சல் சீரியல், மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் டல் அடிக்க தொடங்கியது. போகப் போக டிஆர்பியிலும் சோபிக்காததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியலுக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது என பெயரிடப்பட்டது. முதல் சீசனில் ஜனனியாக நடித்த மதுமிதா, இம்முறை விலகியதால் அவருக்கு பதில் பார்வதி நடித்து வருகிறார். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களும் அப்படியே நடித்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
34
டிஆர்பியில் பிக் அப் ஆன எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
ஆனால் கடந்த ஒரு மாதமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தர்ஷனின் கல்யாண எபிசோடு நெருங்கி வருவதால் பல ட்விஸ்டுகளுடன் பயணித்து வருகிறது கதை. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9ம் இடத்தில் இருந்து தற்போது 3 ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது இந்த சீரியல். எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 25-வது வாரத்தில் 7.56 டிஆர்பியும், 26-வது வாரத்தில் 7.93 டிஆர்பியும், 27-வது வாரத்தில் 8.36 டிஆர்பியும் பெற்றிருந்த நிலையில், 28-வது வாரத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக 8.49 டிஆர்பி ரேட்டிங் பெற்று டாப் 10 பட்டியலில் 3ம் இடத்தையும் பிடித்து அசத்தியது.
கடந்த மாதம் வரை விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்களை விட கம்மியாக டிஆர்பி ரேட்டிங் பெற்று வந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், முதலில் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலை முந்தியது, அதன்பின்னர் அய்யனார் துணை சீரியலை கடந்த வாரம் பின்னுக்கு தள்ளியது. இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலை விட அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று 3-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இனி வரும் வாரங்களில் இந்த சீரியல் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கோலங்கள் ஆதி எண்ட்ரி கொடுத்துள்ளதால் இனி இந்த சீரியல் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.