பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முதலில் இந்தியில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசன் தொகுப்பாளராக களமிறங்கினார். இதனால் முதல் சீசனே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி அந்த சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ்வை விட, பாதியில் வெளியேறிய ஓவியாவுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் படையே உருவானது. அவருக்காக ட்விட்டரில் ஆர்மியெல்லாம் தொடங்கினார்கள்.
24
பிக் பாஸ் டைட்டில் வின்னர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனே வேறலெவல் ஹிட் அடித்ததால் அந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். இதன் இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டில் வின்னர் ஆனார். அடுத்ததாக முகென் ராவ் மூன்றாவது சீசனில் டைட்டிலை தட்டிதூக்கினார். நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும், ஏழாவது சீசனில் அர்ச்சனாவும், கடைசியாக நடந்து முடிந்த 8வது சீசனில் முத்துக்குமரனும் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
34
பிக் பாஸ் சீசன் 9 எப்போது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டன. கொரோனா வந்த பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. அக்டோபர் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரை அந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து சீசன்களாக நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் சற்று முன்கூட்டியே ஆரம்பமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து சினிமாவில் பிசியானதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இருந்து அவர் விலக, அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் மக்களின் குரலாக இருந்து போட்டியாளர்களிடம் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி படார் படார் என கேள்வி கேட்டு முதல் சீசனிலேயே ரசிகர்களை இம்பிரஸ் பண்ணினார் விஜய் சேதுபதி. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனிலும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.