5 வருஷமா சக்கைப்போடு போட்ட சீரியலை திடீரென இழுத்து மூடும் விஜய் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Jul 21, 2025, 09:39 AM IST

விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிநடைபோட்டு வந்த முக்கிய சீரியல் தற்போது கிளைமாக்ஸை எட்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
14
Vijay TV Serial End Soon

சின்னத்திரையில் சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என்றிருந்த காலம்போய், தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் வந்துவிட்டன. சன் டிவிக்கு நிகராக பல விறுவிறுப்பான தொடர்களை கொடுத்து செம் டஃப் கொடுத்து வருகிறது விஜய் டிவி. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று தற்போது கிளைமாக்ஸை நெருங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த புரோமோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அது என்ன சீரியல் என்பதை பார்க்கலாம்.

24
முடியப்போகும் விஜய் டிவி சீரியல் எது?

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவி சீரியல் வேறெதுவுமில்லை... பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த சீரியல் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதில் பாக்கியாவாக சுசித்ராவும், கோபியாக சதீஷும், ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்து வந்தனர். ஒரு குடும்பத் தலைவியாக பாக்கியா சந்திக்கும் சவால்களும், அதில் இருந்து சிங்கப்பெண்ணாய் அவர் மீண்டு வருவதும் தான் இந்த சீரியலின் ஒன்லைன். பெரும்பாலான குடும்பப் பெண்களோடு கனெக்ட் ஆகும்படி பாக்கியலட்சுமி கதாபாத்திரம் இருந்ததால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வந்தது.

34
பாக்கியலட்சுமி சீரியல் கிளைமாக்ஸ்

பாக்கியலட்சுமி சீரியலை டேவிட் என்பவர் தான் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் டயலாக் ரைட்டராக சங்கீதா மோகன், பிரியா தம்பி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த சீரியல் 1400 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் டிஆர்பி ரேஸிலும் சக்கைப்போடு போட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதன் டைமிங் மாற்றப்பட்டதால் பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் மளமளவென சரிய தொடங்கியது. இதனால் தற்போது அந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளனர். விரைவில் பாக்கியலட்சுமி கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

44
முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி தொடரின் இறுதிக்கட்டம் என்கிற கேப்ஷன் உடன் வெளியாகி உள்ள புரோமோவில், இனியா தன்னுடைய கணவரை அடிக்கும் போது அவர் தவறி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார். இந்த பரபரப்பான கிளைமாக்ஸில் என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஒரு சிலரோ இந்த தொடர் முடிவுக்கு வர உள்ள தகவலை பார்த்ததும் சந்தோஷம் அடைந்துள்ளனர். அப்பாடா... இனி கோபி தொல்லை பாக்கியாவுக்கு இல்லை எனக் கூறி கிண்டலடித்து வருகிறார்கள். சிலரோ அரைச்ச மாவையே அரைச்சு 5 வருஷம் ஓட்டீட்டீங்களே என கலாய்த்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories