சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை அதன் டிஆர்பி நிலவரத்தை வைத்து தான் கணிப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சினிமாவைப் போல் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் கதைக்களம் தான். சினிமாவைப் போல் சின்னத்திரை சீரியல்களின் கதைக்களமும் செம விறுவிறுப்பாக உள்ளதால், அதை பார்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சின்னத்திரை சீரியல்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பது அதன் டிஆர்பி நிலவரத்தை வைத்து தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 27வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன? அதன் டிஆர்பி ரேட்டிங் எவ்வளவு? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
25
டாப் 10ல் நுழைந்த சின்ன மருமகள்
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் கடந்த வாரம் 5.50 டிஆர்பி புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் மளமளவென டாப் 10க்குள் நுழைந்துள்ளது. அதன்படி சின்ன மருமகள் சீரியலுக்கு இந்த வாரம் 6.11 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 9ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.46 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அடுத்தபடியாக 8-ம் இடத்தை சன் டிவியின் அன்னம் சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 7வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.52 புள்ளிகளுடன் 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
35
மளமளவென சரிந்த மருமகள் சீரியல் டிஆர்பி
இந்த வாரம் 7வது இடத்தில் அய்யனார் துணை சீரியல் உள்ளது. கடந்த வாரம் இந்த சீரியல் 8-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.45 புள்ளிகளுடன் 7ம் இடத்தை பிடித்திருக்கிறது. இதையடுத்து சன் டிவியின் மருமகள் சீரியலுக்கு இந்த பட்டியலில் 6-ம் இடம் கிடைத்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரை இதன் மகா சங்கமம் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், கடந்த வாரம் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்ட மருமகள் சீரியல் இந்த வாரம் மளமளவென பின்னுக்கு தள்ளப்பட்டு 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 8.06 புள்ளிகள் கிடைத்துள்ளன.
கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 8.23 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக 3ம் இடத்திலேயே நங்கூரமிட்டிருந்த கயல் சீரியல் இந்த வாரம் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதன்படி அந்த சீரியல் 8.31 ரேட்டிங் உடன் 4ம் இடத்தில் உள்ளது. கயல் சீரியலின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் எதிர்நீச்சல் 2 சீரியல் தான். அந்த சீரியல் கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் கயல் சீரியலை ஓவர்டேக் செய்து 3ம் இடத்தை தட்டிதூக்கி உள்ளது. இந்த வாரம் எதிர்நீச்சல் 2 சீரியல் 8.36 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
55
முதலிடம் யாருக்கு?
வழக்கம் போல இந்த வாரமும் முதல் இரண்டு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி முதலிடத்தில் மனிஷா மகேஷ் நடித்துவரும் சிங்கப்பெண்ணே சீரியலும், இரண்டாம் இடத்தில் ஸ்வாதி கொண்டேவின் மூன்று முடிச்சு சீரியலும் உள்ளது. இதில் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.73 டிஆர்பி ரேட்டிங்கும், மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.35 டிஆர்பி ரேட்டிங்கும் கிடைத்துள்ளது.