விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேஸிலும் சன் டிவி சீரியல்களுக்கு செம டஃப் கொடுத்து வருகிறது. இந்த சீரியல் கடந்த கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் இந்தி, மராத்தி என பல்வேறு மொழிகளில் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விறுவிறுப்பான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இந்த சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
24
சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக முத்து என்கிற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா என்கிற கேரக்டரில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். குடிகாரனான காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மீனா, அவனை திருத்தி நல்வழிப்படுத்துவதும், முத்துவின் குடும்பத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எப்படி சமாளித்தார் என்பது தான் இந்த சீரியலின் ஒன்லைன். இந்த சீரியலை எஸ்.குமரன் இயக்கி வருகிறார். இந்த சீரியல் பற்றிய ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன் உண்மை பின்னணி பற்றி தற்போது பார்க்கலாம்.
34
விலகுகிறாரா கோமதி பிரியா?
அது என்னவென்றால் சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து நடிகை கோமதி பிரியா விலகுவதாகவும், அவருக்கு பதில் நடிகை ஆலியா மானசா, மீனா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் யூடியூப்பில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. இதைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள் கோமதி பிரியா நன்றாக தானே நடித்து வந்தார், அவர் ஏன் விலகினார் என கேள்வி எழுப்பி வந்தனர். அண்மையில் அவருக்கு திருமனம் எனக்கூறி செய்தி ஒன்று உலா வந்ததால், திருமணத்துக்காக அவர் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கக்கூடும் என சிலர் கூறி வந்தனர். ஆனால் இதுபற்றி அவருடன் நடிக்கும் நடிகர் ஒருவரே விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், கோமதி பிரியா சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலக உள்ளதாக பதிவிடப்பட்ட யூடியூப் வீடியோவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள பழனியப்பன். கோமதி பிரியா இந்த சீரியலை விட்டு விலகிவிட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்றும், அவர் தொடர்ந்து இந்த சீரியலில் தான் நடித்து வருகிறார் எனவும் விளக்கம் அளித்தார். அவரின் இந்த விளக்கத்தை கேட்ட பின்னர் தான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்தாலும் அதில் முத்துவாக வெற்றியும், மீனாவாக கோமதி பிரியாவும் தான் நடிக்கார்கள் என திட்டவட்டமாக கூறி உள்ளார் பழனியப்பன்.