சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை ஓட்டல் ஒன்றிற்கு வரவைத்து பிளாக்மெயில் செய்துள்ள ரோகிணி டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என கையெழுத்து போட சொன்ன நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியிடம் இருந்து எப்படியாவது டைவர்ஸ் வாங்கிவிட வேண்டும் என இருக்கிறார் மனோஜ். ஆனால் ரோகிணியோ, மனோஜை தன் வழிக்கு கொண்டு வந்து அவரை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை பார்க்கும் ரோகிணி, தற்போது மனோஜை ஆசை வார்த்தை கூறி ஓட்டலுக்கு வர வைத்து, அங்கு தான் காட்டும் பேப்பரில் கையெழுத்து போடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
விஜயாவிடம் உண்மையை சொன்ன மனோஜ்
ரோகிணியிடம் வசமாக சிக்கிக் கொண்ட மனோஜ், அந்த ஓட்டல் அறையை விட்டு வெளியே செல்ல முடியாததால், பாத்ரூமுக்குள் சென்று தன்னுடைய அம்மா விஜயாவுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை கூறுகிறார். பின்னர் விஜயா, வீட்டில் உள்ள முத்து, மீனா, அண்ணாமலை ஆகியோரிடமும், ரோகிணி மனோஜை பிளாக்மெயில் செய்யும் விஷயத்தை சொல்லிவிடுகிறார். இதன்பின்னர் முத்துவும், மீனாவும் அந்த ஹோட்டல் எது என கேட்டு தெரிந்துகொண்டு, அங்கு கிளம்புகிறார்கள். அதற்குள் ரோகிணி, பாத்ரூமில் இருக்கும் மனோஜை வெளியே அழைத்து, உங்க அம்மாவுக்கு போன் போட்டு சொல்றியா என கேட்கிறார்.
35
கையெழுத்து போட மறுக்கும் மனோஜ்
ஒழுங்கா அவங்களுக்கு போன் பண்ணி இங்க வர வேண்டாம்னு சொல்லு, இல்லேனா இப்பவே நான் தூக்குல தொங்கிடுவேன் என பிளாக்மெயில் பண்ணுகிறார். இதையடுத்து ரோகிணி சொன்னபடியே மனோஜ் போன் போட்டு விஜயாவிடம் விஷயத்தை சொல்கிறார். ரோகிணி சொல்லி தான் மனோஜ் இப்படி சொல்கிறார் என்பதை கண்டுபிடித்த முத்துவும், மீனாவும் கிளம்பி அந்த ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அதன்பின்னர் ரோகிணி மனோஜிடம், நாம் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் என எழுதியுள்ள பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு சொல்ல, மனோஜ் முடியவே முடியாது என மறுக்கிறார்.
மனோஜ் கையெழுத்து போட மறுப்பதால், உடனே தூக்கில் தொங்கப் போகிறேன் என மிரட்டுகிறார் ரோகிணி. அப்போது அந்த ரூமின் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. நான் அவ்வளவு சொல்லியும் உங்க அம்மா வந்துட்டாங்களா என சொல்லி மனோஜ் உடன் ரோகிணி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது வெளியே கிரிஷின் குரல் கேட்கிறது. பின்னர் வேறுவழியின்றி ரோகிணி ஹோட்டல் ரூம் கதவை திறந்து பார்த்தால் கிரிஷ் மட்டும் நிற்கிறார். அதன்பின்னர் முத்துவும், மீனாவும் உள்ளே எண்ட்ரி ஆகிறார்கள். அவர்கள் இருவரும் மனோஜை செம திட்டு திட்டுகிறார்கள்.
55
மீனா மீது பழிபோடும் விஜயா
ரோகிணியையும் இனி இந்த மாதிரி சீப்பான வேலையெல்லாம் செய்யாத என திட்டிவிட்டு மனோஜை அங்கிருந்து அழைத்து செல்கிறார் முத்து. மனோஜ் ஒருவேளை பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துட்டானோ என விஜயா பதறிக் கொண்டிருக்க, அப்போது அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள் முத்துவும், மீனாவும். அப்போது வீட்டில் உள்ள அனைவரும் மனோஜை திட்டுகிறார். ஆனால் விஜயா மட்டும், இந்த பிரச்சனைக்கும் காரணம் மீனா தான் என சொல்கிறார். அவ இங்க இருக்குறது நால தான் இப்படியெல்லாம் நடக்குது என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.