Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் குடும்பத்தை சின்னாபின்னமாக உடைத்த சிந்தாமணி, தற்போது ரோகிணியை வைத்து கேம் ஆடத் தொடங்கி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீட்டை பைனான்சியர் ஜப்தி செய்துள்ளதால், அனைவரும் வெளியேறிவிட்டனர். அவர்களை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்கிற சிந்தாமணியின் திட்டம் பழிக்காமல் போனது. ஏனெனில் அவர்கள் வீட்டை ஜப்தி செய்யும் முன்னரே காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டார் முத்து. தற்போது விஜயா வசதிக்கு ஆசைப்பட்டு ஸ்ருதியின் அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். ஆனால் அண்ணாமலையை மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
25
அவதிப்படும் விஜயா
மீனா அம்மா வீட்டில் இருக்கும் அண்ணாமலை, அங்கு வசதி கம்மியாக இருந்தாலும் அங்கு இருப்பவர்கள் அண்ணாமலையை தாங்கு தாங்குனு தாங்குகிறார்கள். அதனால் அவர் எந்த கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கிறார். மறுபுறம் ஸ்ருதி வீட்டில் விஜயாவுக்கு எல்லா வசதியும் இருந்தாலும், ஆனால் அவருக்கு அங்கு நிம்மதி இல்லை. கேரளாவில் சாப்பிடும் மட்டை அரிசியில் சாப்பாடு போடுகிறார்கள். அது விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இருக்குற இடத்துக்கு ஏத்த மாதிரி மாற பழகிக் கொள்ள வேண்டும் என விஜயாவுக்கு சொல்கிறார்கள்.
35
மாட்டிக்கொண்ட மனோஜ்
மறுபுறம் மனோஜ், இரவு தன்னுடைய கடையிலேயே தங்குகிறார். அவருக்காக அவருடைய நண்பர் மொட்டை சந்தோஷ் கட்டில் வாங்கிக் கொடுத்ததோடு, ஒரு எலிப்பொரியையும் வாங்கி வந்திருந்தார். அவரையும் தன்னுடனே கடையில் தங்க வைக்கிறார் மனோஜ். இரவில் எலி அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்து பயந்துபோன மனோஜ், தூக்கமின்றி இருக்க, அவரது நண்பர் சந்தோஷ், எதையும் பொருட்படுத்தாமல் நன்கு குறட்டை விட்டு தூங்குகிறார். அவரின் குறட்டை சத்தத்தால் தூக்கம் வராமல் திண்டாடுகிறார் மனோஜ்.
மறுபக்கம் முத்துவும் மீனாவும் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டே, இந்த பிரச்சனையில் இருந்து எப்படி நம் வீட்டை மீட்பது என்பது பற்றி ஆலோசிக்கிறார்கள். மறுதினம் ரோகிணி, சிந்தாமணியை அவரது வீட்டில் சந்திக்கிறார். சிந்தாமணிக்கு தற்போது விஜயாவின் குடும்பத்தில் யார்... யார் எங்கெங்கு இருக்கிறார்கள் என்கிற மொத்த விஷயமும் தெரியவருகிறது. ஆக மொத்தத்தில் அந்த குடும்பம் சிதறிப் போனதால் சந்தோஷமாக இருக்கிறார் சிந்தாமணி. ரோகிணியிடம் பேசுகையில், இது தான் நீ மனோஜ் உடன் சேருவதற்கு சரியான நேரம் என சொல்கிறார் சிந்தாமணி.
55
ரோகிணி போடும் ஸ்கெட்ச்
நீ போய் மனோஜுக்கு ஆறுதலாக இரு, அவன் உன் பக்கம் வந்திருவான் என அட்வைஸ் பண்ணுகிறார். ரோகிணியும் இதைப்பயன்படுத்தி, மனோஜை தன் பக்கம் இழுத்துவிட வாய்ப்பு உள்ளது. அநேகமாக மனோஜ், ரோகிணி வீட்டில் தங்குவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஆன டைவர்ஸ் கேஸும் வாஷ் அவுட் ஆகக் கூடும். இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.