Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீட்டை சீல் வைக்க பைனான்சியர் உடன் சென்றிருந்த சிந்தாமணிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதைப்பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக விஜயாவின் வீட்டை ஜப்தி செய்ய முடிவெடுத்த பைனான்சியர், கடன் தொகையை உடனடியாக கொடுக்காவிட்டால் வீட்டை சீல் வைப்பேன் என எச்சரித்திருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாததால், அவர்கள் வீட்டை சீல் வைக்க வரும் முன் நாம் வெளியே சென்றுவிடலாம் என முடிவெடுத்து, அனைவரும் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புகிறார்கள். முத்து அண்ணாமலையை மீனாவின் அம்மா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். ஸ்ருதி தன்னுடைய அம்மா வீட்டிற்கு விஜயாவை அழைத்து செல்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆச்சு என்பதை பார்ப்போம்.
25
ஃபீல் பண்ணும் விஜயா
ஸ்ருதி வீட்டிற்கு செல்லும் விஜயாவை அவரது குடும்பத்தார் ஆரம்பத்தில் நன்றாக கவனிக்கிறார்கள். அதன்பின்னர் விஜயாவுக்கு ஸ்ருதியின் அம்மா காஃபி போட்டு கொடுக்கிறார். கேரளா ஸ்பெஷலான கட்டன் சாயாவை தான் விஜயாவுக்கு கொடுக்கிறார்கள். விஜயாவுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அவரால் ஒரு வாய் கூட குடிக்க முடியவில்லை. அப்போ தான் விஜயாவுக்கு மீனா போட்டுக் கொடுக்கும் காஃபி நியாபகத்துக்கு வருது. மீனா, அவ்வளவு டேஸ்டா காஃபி போட்டு வந்து கொடுத்தாலும் அதை குடிச்சிட்டு நல்லா இருக்குனு சொல்லாம இருந்த விஜயா, இவ்ளோ கேவலமான கட்டன் சாயாவை குடிக்கிறோமே என நினைத்துப் பார்க்கிறார்.
35
கடையில் படுக்கும் மனோஜ்
மறுபுறம் மனோஜ் கடையில், ஜீவா மற்றும் சந்தோஷை அழைத்து, இனி நான் கடையில் தான் தங்கப் போகிறேன் என சொல்கிறார். அதற்காக மொட்டை சந்தோஷ், மனோஜ் படுப்பதற்காக கட்டில் எல்லாம் வாங்கி வந்து கொடுக்கிறார். அதனுடனே ஒரு எலிப்பொரியையும் வாங்கி கொடுத்திருக்கிறார் சந்தோஷ். இது எதுக்கு என மனோஜ் கேட்க, நம்ம கடையில் நிறைய பெரிய பெரிய எலியா இருக்கு, நைட்டு நீங்க தூங்கும் போது அது உங்களை கடித்துவிடக் கூடாது என்பதற்காக தான் இந்த எலிப் பொரியை வாங்கி வந்ததாக கூறுகிறார் சந்தோஷ். இதனால் பயந்துபோன மனோஜ், நீயும் இன்னைக்கு நைட் என்கூட தங்கு என சொல்லி சந்தோஷையும் தன்னுடன் தங்க வைக்கிறார்.
இதுக்கப்புறம் சிந்தாமணியை தான் காட்டுகிறார்கள். விஜயாவின் வீட்டுக்கு சீல் வைக்கலாம் என்று ஆசையோடு வந்து பார்த்த சிந்தாமணி, வீடு பூட்டு போட்டு பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். விஜயா, அண்ணாமலை, மீனா, முத்து ஆகியோரை அவமானப்படுத்தலாம்னு பார்த்தால், அவங்க கரெக்டா பிளான் பண்ணி முன்கூட்டியே காலி பண்ணிட்டாங்களே என பைனான்சியரிடம் சொல்லி புலம்புகிறார் சிந்தாமணி. இதையடுத்து வேறு வழியின்றி ஆளே இல்லாத வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு செல்கிறார்கள். தன்னுடைய பிளான் சொதப்பியதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சிந்தாமணி.
55
அண்ணாமலை மீது அக்கறை
மறுபுறம் அண்ணாமலை மீனாவின் அம்மா வீட்டில் தங்கும்போது அவர் கீழே படுத்துக்குறேன் என சொல்ல, அதற்கு அவர்கள் கட்டில்ல படுங்க என சொல்கிறார்கள். நான் கிராமத்துல கீழ தான் படுப்பேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இருந்தாலும் அவருக்காக தனியாக ஒரு கட்டில் வாங்கிக் கொடுக்கிறார்கள். பின்னர் அனைவருடனும் ஜாலியாக பேசிக் கொண்டு சாப்பிடுகிறார் அண்ணாமலை. குருவிக் கூடு போல ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தவர்கள். தற்போது தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். இதுக்கப்புறம் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.