Siragadikka Aasai : பிரியும் விஜயா - அண்ணாமலை; வீடு ஜப்தி செய்யப்படும் முன் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்

Published : May 06, 2026, 08:40 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் பைனான்சியரை பார்க்க முடியாமல் போன விஷயத்தை சொன்னதைக்கேட்டு மனமுடைந்து போகிறார் அண்ணாமலை. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய முடிவுக்கு வந்துள்ளார் பைனான்சியர். அவர் உடனடியாக பணம் கேட்டிருந்த நிலையில் அவரிடம் பேச முத்துவும் மீனாவும் அவரது ஆபீசுக்கு சென்று இருந்தனர். ஆனால் அவரோ அவர்கள் இருவரையும் அலைக்கழித்து சந்திக்க மறுத்து விட்டார். இதனால் அப்செட் ஆன முத்து வக்கீல் இடம் சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு இருக்குமா எனக் கேட்க, அவரோ கோர்ட் விடுமுறை என்பதால் இந்த ஜப்தி நோட்டீசை வாபஸ் வாங்க வைக்க முடியாது என கை விரித்து விடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
சோகத்தில் அண்ணாமலை

முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்தவுடன் அவர்களிடம் பைனான்சியர பார்த்து பேசினீங்களா என அண்ணாமலை கேட்க, அமைதியாக நிற்கிறார் முத்து. இதையடுத்து அந்த பைனான்சியர் தங்களை தெருத்தெருவாக அலையவிட்ட விஷயத்தை அண்ணாமலையிடம் கூறும் மீனா, அவர் கடைசி வரை எங்களை பார்க்கவில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஷாக்கான அண்ணாமலை அப்போ வீடு நம்ம கையை விட்டு போயிடுமா என சொல்லி இடிந்து போய் அமர்கிறார். அதேபோல் வக்கீலும் இந்த ஜப்தி நோட்டீசை வாபஸ் வாங்க வைக்க முடியாது என சொன்னதை முத்து அனைவரிடம் சொல்ல அதைக் கேட்ட விஜயா கண்ணீர் விட்டு அழுகிறார்.

35
முத்து கொடுக்கும் ஐடியா

அப்போது அருகில் இருந்த மனோஜ், பேசாமல் இந்த வீட்டை விற்று விடலாம் என சொல்ல, அனைவரும் கடுப்பாகி அவரை திட்டுகிறார்கள். தான் ரத்தம் சிந்தி உழைத்து கட்டிய வீடு இப்போ என் கையை விட்டு போகப் போகிறதே என்கிற சோகத்தில் இருக்கும் அண்ணாமலை நானும் செத்து விடுகிறேன் என சொல்ல, அவரை சமாதானப்படுத்துகிறார் முத்து. வீட்டை ஜப்தி செய்ய வரும்போது ஊரே நம்மளை வேடிக்கை பார்க்கும், நம்முடைய மானம் மரியாதை எல்லாம் போயிடும் என சொல்லி ஃபீல் பண்ணுகிறார் அண்ணாமலை. அப்போது முத்து ஒரு ஐடியா கொடுக்கிறார். வீட்டை ஜப்தி செய்ய வரும் முன் நாம் அனைவரும் இங்கிருந்து சென்றுவிடலாம் என கூறுகிறார்.

45
வீட்டை விட்டு வெளியேறும் குடும்பம்

இந்த வீட்டை விட்டுட்டு நாம எங்க போறது என அண்ணாமலை கேட்க, நாம் அனைவரும் மீனா அம்மா வீட்டுக்கு சென்று தங்கலாம் என கூறுகிறார் முத்து. அங்க எப்படி எல்லாருமே தங்க முடியும் என அண்ணாமலை கேட்க, நீங்களும் அம்மாவும் அங்க வாங்க, ஸ்ருதியும் ரவியும், ஸ்ருதி அம்மா வீட்டுக்கு போகட்டும் என சொல்கிறார். உடனே மனோஜ் அப்போ நான் எங்க போறது என கேட்க, நீ உன்னுடைய ஷோரூம் லையே தங்கிக்கோ எனக் கூறுகிறான் முத்து. அண்ணாமலை மீனாவின் அம்மா வீட்டுக்கு வர சம்மதித்தாலும் விஜயா அங்கு தன்னால் வர முடியாது எனக் கூறிவிடுகிறார். அப்போ நீங்க ஸ்ருதி அம்மா வீட்ல போய் தங்கிக்கோங்க என சொல்கிறார் முத்து.

55
அடுத்தது என்ன?

பின்னர் அனைவரும் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அண்ணாமலை கண்ணீர் மல்க வீட்டு வாசலில் நிற்கிறார். விஜயாவும் இப்படி நடுத்தெருவுக்கு வந்துட்டோமே என பீல் பண்ணி அழுகிறார். அண்ணாமலையை தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு முத்துவும் மீனாவும் கிளம்புகிறார்கள். விஜயாவுடன் ஸ்ருதியும் ரவியும் மற்றொரு காரில் கிளம்பி செல்கிறார்கள். இதை அடுத்து என்ன ஆனது? வீட்டை ஜப்தி செய்ய வந்த பைனான்சியர் அவர்கள் வீட்டில் இல்லாததை அறிந்து என்ன முடிவு எடுத்தார்? விஜயாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற சிந்தாமணியின் கனவு பலித்ததா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories