Ethirneechal Thodargiradhu : மெமரி லாஸ் ஆன மாதிரி நடித்தாரா ஈஸ்வரி? எல்லா உண்மையையும் போட்டுடைத்த ஜனனி

Published : May 06, 2026, 09:23 AM IST

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தாக்கியதால் தான் நீங்க கோமாவுக்கு போனீங்க என ஈஸ்வரியிடம் கூறி உள்ளார் ஜனனி. இதன் பின் என்ன ஆச்சு என்பதை பார்ப்போம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் செய்த சூழ்ச்சியால் ஜனனி தவிர மற்ற பெண்கள் அனைவரும் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல மாட்டோம் என எழுதி கொடுத்து விட்டார்கள். இந்த விஷயத்தை மதிவதினிடம் சொல்லி ஃபீல் பண்ணிய ஜனனி அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை எனக் கூற, அப்போது மதிவதினி அவருக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். நீங்க நடந்த விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஈஸ்வரிக்கு சொல்லுங்க என சொன்னதும் விறுவிறுவென வீட்டுக்குள் கிளம்பிச் செல்கிறார் ஜனனி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஜனனிக்கு முட்டுக்கட்டை போட்ட குடும்பத்தார்

ஈஸ்வரியிடம் சென்று பேசும் ஜனனி, இப்போ இங்க எல்லா உண்மையும் நான் உடைக்க போகிறேன் என சொல்கிறார். அப்போது அவரை தடுக்கும் நந்தினி, ஜனனி நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு தெரியும். தயவு செஞ்சு இப்போதெல்லாம் சொல்ல வேண்டாம் எனக் கூறுகிறார். அதேபோல் ஞானமும் அவரை தடுத்து, இப்போ எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை. வாயை மூடிட்டு உன்னால சும்மா இருக்க முடியாதா என ஜனனியை பார்த்து கேட்கிறார். மறுபுறம் கதிரும் ஜனனியிடம், குடும்பத்துல களங்கம் ஏற்படுத்திகிட்டே இருப்பியா. எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டியா என சண்டை போடுகிறார். ஆனால் ஜனனி அதற்கெல்லாம் அசரவில்லை.

35
உண்மையை சொன்ன ஜனனி

ஜனனி சொல்ல வருவதை அனைவரும் சொல்ல விடாமல் தடுக்க, அப்போது குறுக்கிட்டு பேசும் ஈஸ்வரி, நீ சொல்ல வந்ததை சொல்லு என கூறுகிறார். உடனே ஜனனி, நீங்க ஹாஸ்பிடலுக்கு போனதுக்கு காரணம் உங்க வீட்டுக்காரர் தான். உங்களை அடித்து கோமா நிலைக்கு கொண்டு சென்றதும் அவர்தான் என்கிற உண்மையை ஈஸ்வரிடம் போட்டுடைக்கிறார் ஜனனி. இதையெல்லாம் கேட்டதும் அமைதியாக இருக்கிறார் ஈஸ்வரி. அவரிடம் நான் சொன்னதெல்லாம் வைத்து ஒரே ஒரு வாக்குமூலம் மட்டும் கொடுத்தீர்கள் என்றால் குணசேகரன் ஓட ஆட்டம் முடிந்துவிடும் எனக் கூறுகிறார் ஜனனி.

45
ஈஸ்வரி கொடுத்த ட்விஸ்ட்

தன்னை தன்னுடைய கணவர் இப்படி கொடுமைப்படுத்தி இருக்கிறார் என அறிந்ததும் ஈஸ்வரி ஜனனி பக்கம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார். என் கணவர் எப்படிப்பட்டவர் அவர் என்னை எப்படி எல்லாம் நடத்தினார் என எல்லாம் எனக்குத் தெரியும் என சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஈஸ்வரி. அது மட்டும் இன்றி ஜனனியிடம், நீ எனக்கு புதுசா ஒரு நம்பர் வாங்கி கொடுத்த அந்த நம்பர் வேற யாருக்கு தெரியும் என கேட்கிறார். வேற யாருக்கும் தெரியாது என சொல்லும் ஜனனியிடம், இதைக் கேளு என ஒரு ஆடியோவை போட்டு காட்டுகிறார் ஈஸ்வரி. அதைக் கேட்டு ஷாக் ஆகிறார் ஜனனி.

55
ஆடியோவில் இருந்தது என்ன?

அப்படி அந்த ஆடியோவில் என்னதான் இருந்தது. ஈஸ்வரிக்கு அந்த ஆடியோவை அனுப்பியது யார்? இத்தனை நாட்கள் தனக்கு பழசெல்லாம் மறந்து விட்டது என சொல்லி ஈஸ்வரி டிராமா பண்ணினாரா? ஈஸ்வரியை ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்க ஜனனி போட்ட திட்டமெல்லாம் பொய்த்து போனதால் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஜனனி? இப்படி அனல் பறக்கும் டிவிஸ்ட்களோடு சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories