Top 10 Serial TRP : வாஷ் அவுட் ஆன எதிர்நீச்சல்... இந்த வார டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம்

Published : May 07, 2026, 03:45 PM IST

Top 10 Tamil Serial : தமிழ்நாட்டில் போட்டிபோட்டி சின்னத்திரை சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவியும், விஜய் டிவியும் தான் இந்த வார டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

PREV
15
Top 10 Tamil Serial TRP Rating

சின்னத்திரையை பொறுத்தவரை சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் சினிமாவுக்கு நிகராக செம விறுவிறுப்பான கதைக்களத்துடன் இருப்பதால், அதற்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாகவே சீரியல்களை வாரத்தின் 7 நாட்களும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன. அந்த சீரியல்களின் வெற்றியை தீர்மானிப்பது அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் 2026-ம் ஆண்டின் 17-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

25
டாப் 10 சீரியல்கள்

சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது இந்த வாரம் அதளபாதாளத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 5.35 புள்ளிகள் உடன் 9ம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் வெறும் 4.79 புள்ளிகளை மட்டுமே பெற்று 10ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியல் 10 மணிக்கு மாற்றப்பட்டது தான் அதன் பின்னடைவுக்கு முக்கிய காரணாமாக கருதப்படுகிறது. இந்த பட்டியலில் 9-ம் இடத்தில் விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5.20 புள்ளிகள் உடன் 10ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 4.88 புள்ளிகளோடு 9-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

35
முன்னேறிய விஜய் டிவி தொடர்கள்

இந்த வாரம் 8-ம் இடத்தில் சன் டிவியின் மாலை நேர தொடர்களான செல்லமே செல்லம் மற்றும் அன்னம் ஆகியவற்றின் மகா சங்கமம் தான் உள்ளது. இந்த மகா சங்கமத்திற்கு 5.47 புள்ளிகள் கிடைத்துள்ளன். இதில் அன்னம் சீரியல் கடந்த வாரத்தில் 6-ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக 6 மற்றும் 7-ம் இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய இரு தொடர்கள் உள்ளன. இதில் 8-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்துக்கு முன்னேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 5.84 புள்ளிகளையும், 7-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்துக்கு தாவி உள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 6.13 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

45
சரிவை சந்தித்த அய்யனார் துணை

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான அய்யனார் துணை இந்த வாரம் 5-ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 6.79 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.41 புள்ளிகளை மட்டுமே பெற்று ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதற்கு உல்டாவாக கடந்த வாரத்தில் ஐந்தாம் இடம் பிடித்திருந்த சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான மருமகள், இந்த வாரம் 4-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த வாரத்தில் 6.62 புள்ளிகளை பெற்றிருந்த மருமகள் சீரியல், இந்த வாரம் 6.44 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ஒரு இடம் முன்னேறி உள்ளது.

55
ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி

வழக்கம் போல் இந்த வாரமும் சன் டிவி சீரியல்கள் தான் டாப் 3 இடங்களை வாரிசுருட்டி உள்ளன. அதன்படி சன் டிவியின் கயல் சீரியல் 6.80 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை தக்க வைத்து உள்ளது. இருந்தாலும் கடந்த வாரம் 7.31 புள்ளிகளை பெற்றிருந்த அந்த சீரியல் இந்த வாரம் அதைவிட குறைவாகவே ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த வாரம் இரண்டாம் இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. அதற்கு 6.94 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரமும் முதலிடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 8.57 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories