Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கடன் கேட்டு சிந்தாமணியின் கணவரை சந்திக்க சென்றிருக்கிறார். இதையடுத்து என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் வீடு ஜப்தி செய்யப்பட்டதால் மீனா வீட்டில் தஞ்சமடைந்துள்ளார் விஜயா. அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மீனாவின் அம்மா சந்திரா முனைப்பு காட்டி வர, அவரின் தோழிகள் இருவர் வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தபோது மீனாவின் மாமியார் கொடுமைக்காரி என பேசிக் கொண்டிருக்க, அதை விஜயா, ஒட்டுக்கேட்டுவிடுகிறார். இதையடுத்து விஜயா, சந்திராவிடம் நான் கொடுமைக்காரினு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களா என சண்டை போட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சந்திரா, விஜயாவை கொடுமைக்காரி என வெளியே சொன்னது அறிந்த முத்து அவர் மீது கோபத்தில் இருக்கிறார். இதனால் கடுப்பில் மாடிக்கு சென்ற முத்துவிடம் பேசப் போகும் மீனா, எங்கம்மா அப்படியெல்லாம் சொல்லிருக்க மாட்டாங்க என சொல்ல, அவங்க சொல்லாம எப்படி அந்த பொம்பளைங்க வந்து சொல்லிருப்பாங்க என கேட்கிறார். பதிலுக்கு மீனாவும் உங்க அம்மா பத்தி எங்க அம்மா சொன்னது தப்பு தான், ஆனால் என்னை உங்க வீட்டுல ஒரு வேலைக்காரி மாதிரி தான் உங்க அம்மா நடத்துனாங்க என முத்துவிடம் சண்டைபோடுகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிவிட, முத்து அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
35
மனோஜை அடிக்க பாயும் முத்து
இதையடுத்து ரவியுடன் சேர்ந்து மனோஜின் ஷோரூமிற்கு செல்கிறார் முத்து. அங்குபோய் வீட்டின் கடனை அடைக்க அவனிடமும் பணம் கேட்கலாம் என ரவி முத்துவை அழைத்து செல்கிறார். அவரிடம் உன்னால் எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என ரவி கேட்க, அதற்கு மனோஜ் என்னால ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது என சொல்கிறார். அப்போ வீடு ஜப்திக்கு போன பரவாயில்லயா என கேட்டதற்கு, அப்பா தான் அந்த வீட்டுல எனக்கு பங்கு கிடையாதுனு சொல்லிட்டாருல, அப்போ அந்த வீடு எக்கேடு கெட்டுப் போனா எனக்கு என்ன என சொல்கிறார். இதனால் கோபமடையும் முத்து, மனோஜின் சட்டைபிடித்து அவரை அடிக்கப் போகிறார். ரவி அவரை தடுத்து நிறுத்துகிறார்.
அப்பா அன்னைக்கு கோபத்துல ஏதோ சொல்லிட்டாரு. தயவு செஞ்சு நம்ம மூணு பேரும் சேர்ந்து கடனை அடைத்துவிடலாம் என ரவி கேட்க, அதற்கு மனோஜ், எனக்கு அப்பா மேல நம்பிக்கை இல்லை என கூறுகிறார். அப்படி நான் பணம் தந்தால், அந்த வீட்டில் மனோஜுக்கும் பங்கு இருக்கிறது என அப்பாவை எழுதித்தர சொல்லு என மனோஜ் கூற, மீண்டும் டென்ஷன் ஆகிறார் முத்து. பின்னர் ரவி, அப்பா உனக்கு சொத்துல பங்கு தரலேனா எங்களுக்கு வர்றதுல உனக்கு சரிசமமா எழுதி வைக்கிறோம் என சொல்கிறார். அதற்கும் வளைந்துகொடுக்காத மனோஜ், அப்போ அதை ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டுக் கொடு என சொல்ல, ரவியும் டென்ஷன் ஆகி அங்கிருந்து கிளம்புகிறார்.
55
சிக்கப்போகும் மீனா
மறுபுறம் மீனா, தன்னுடைய தம்பி சத்யாவை பார்க்க செல்கிறார். அப்போது ஓனர் வீட்டில் இருக்கும் சத்யாவிடம், உன்னுடைய முதலாளி கிட்ட சொல்லி பணம் ரெடி பண்ணித் தர முடியுமா என கேட்கிறார். சிந்தாமணியின் கணவர் நல்லவர் என நம்பி அவரிடம் பணம் கேட்க வந்திருக்கிறார் மீனா. ஆனால் அவரோ இந்த சூழலை பயன்படுத்தி மீனாவை பழிவாங்க பிளான்போட்டு இருக்கிறார். ஏனெனில் சத்யா, அவருடைய மகளை காதலிக்கும் விஷயம் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இந்த சூழலை பயன்படுத்தி ஏதோ திட்டம் தீட்டுகிறார் சிந்தாமணியின் கணவர். அது என்ன என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.