Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!

Published : May 22, 2026, 06:28 PM IST

Date of Birth Numerology: உங்க பிறந்த தேதியை வெச்சே, நீங்க வேலையில ஜெயிப்பீங்களா இல்ல பிசினஸ்ல கொடிகட்டிப் பறப்பீங்களானு சொல்லிடலாம். நியூமராலஜி படி, உங்க மூல எண்ணை வைத்து இதை கணிக்க முடியும். 

PREV
15
Date of Birth Numerology

நியூமராலஜி படி, பிறந்த தேதிங்கிறது நம்ம வயசை சொல்றதுக்கு மட்டுமில்ல, அதுல நம்ம கரியர், பணம், வெற்றினு நெறைய ரகசியங்கள் ஒளிஞ்சிருக்கு. இதனாலதான், இப்போ இருக்கிற இளைஞர்கள் மத்தியில நியூமராலஜி மற்றும் பிறந்த தேதி ஜோதிடம் மேல ஆர்வம் அதிகமாகிட்டே வருது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு மூல எண் அதாவது அதிர்ஷ்ட எண் இருக்கும். அது அவங்களோட குணம், எதிர்காலம் எல்லாத்தையும் பாதிக்கும். இதனாலதான், சிலர் வேலையில பெரிய ஆளா வராங்க, சிலர் பிசினஸ்ல கலக்குறாங்க.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

25
'மூல எண்' எப்படி கண்டுபிடிக்கிறது?

நியூமராலஜியில, பிறந்த தேதியோட எண்களைக் கூட்டி மூல எண்ணை கண்டுபிடிப்பாங்க. உதாரணமா, நீங்க எந்த மாசத்துல 1-ல இருந்து 9-ஆம் தேதிக்குள்ள பிறந்திருந்தா, அந்த தேதிதான் உங்க மூர எண். ஒருவேளை 10-ல இருந்து 31-ஆம் தேதிக்குள்ள பிறந்திருந்தா, அந்த ரெண்டு எண்களையும் கூட்டணும். உதாரணமா, 23-ஆம் தேதி பிறந்திருந்தா, 2+3 = 5. அப்போ உங்க மூல எண் 5.

Numerology: உங்க பிள்ளை இந்த தேதியில பிறந்தவங்களா? அப்போ பெற்றோருக்குக் குபேர யோகம் கன்பார்ம்.! 

35
யாரெல்லாம் வேலையில ஜெயிப்பாங்க?

எண் கணித ஜோதிடத்தின்படி, மூல எண் 2, 4, 6, 7 கொண்டவங்க ரொம்ப அமைதியானவங்களாகவும், ஒழுக்கமாவும் இருப்பாங்க. இவங்க வாழ்க்கையில ரொம்ப பொறுப்பா நடந்துக்குவாங்க. சட்டுனு உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டாங்க. அதே மாதிரி, விதிகளை சரியா பின்பற்றி வேலை செய்ய விரும்புவாங்க. இவங்க பெரும்பாலும் அரசாங்க வேலை, கார்ப்பரேட் துறை, கல்வி, ஆராய்ச்சி போன்ற துறைகள்ல நல்லா பிரகாசிக்க முடியும். அரசியல்ல கூட இவங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கு.

Date of Birth Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகமாக கோபப்படுவாங்களாம்.! கோபம் வந்தா எரிமலையா வெடிப்பாங்களாம்.!

45
பிசினஸ்ல யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்?

மூல எண் 1, 3, 5, 8, 9 கொண்டவங்களைப் பத்திப் பார்த்தா, இவங்களுக்கு இயல்பாவே தலைமைப் பண்பும், ரிஸ்க் எடுக்கிற குணமும் இருக்கும். மத்தவங்களுக்கு கீழ வேலை பார்க்க இவங்களுக்குப் பிடிக்காது. சுதந்திரமா செயல்படவே விரும்புவாங்க. இவங்க மார்க்கெட்டிங், பிசினஸ், ஸ்டார்ட்அப், மேனேஜ்மென்ட் போன்ற துறைகள்ல பெரிய பெயர் சம்பாதிப்பாங்க. சின்னதா ஒரு தொழில் தொடங்கினா கூட, அதை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு போற திறமை இவங்களுக்கு உண்டு.

Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.! ஆனால் 40 வயத்துக்குப் பின் சனி பகவான் அருளால் வாழ்க்கை மாறும்.!

55
பொறுப்புத்துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது

Read more Photos on
click me!

Recommended Stories