எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனை விட்டு பார்கவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தன்னுடைய தங்கச்சி அன்புக்கரசிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்குமாறு ஆதி குணசேகரனிடம் கெஞ்சி உள்ளார் அறிவுக்கரசி. ஆனால் அவரோ, இதுகுறித்து என் பொண்டாட்டி ஈஸ்வரி தான் முடிவெடுக்கணும் என ஒரே போடாக போட்டு விடுகிறார். பின்னர் ஈஸ்வரியிடம் அறிவுக்கரசி கெஞ்சி கேட்டுப் பார்க்கிறார். ஆனால் அவரோ, இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என சொல்லிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஈஸ்வரி கல்யாணத்துக்கு மறுத்தாலும், தர்ஷனையும் அன்புக்கரசியையும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் அறிவுக்கரசி. என் தங்கச்சி கூட திருச்சி வரைக்கு போயிட்டு, ரெண்டு பேரும் ஃபிரெண்டா இருக்கலாம்னு சொல்லி அவ மனசுல ஆசையை வளர்த்துவிட்டிருக்கான் உங்க மகன். அப்புறம் ஏன் என் தங்கச்சி விட்டுக் கொடுத்து போகணும் என கேட்கிறார் அறிவு. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கும் ஈஸ்வரி தர்ஷனை தர தரவென மாடிக்கு அழைத்து செல்கிறார்.
35
தர்ஷனை அடித்த ஈஸ்வரி
அடக்க முடியாத கோபத்தில் இருக்கும் ஈஸ்வரி, மாடிக்கு சென்றதும் தர்ஷனிடம் சரமாரி கேள்விகளை கேட்கிறார். பார்கவி வீட்டுல இருக்கா, ஆபிஸ் போன அந்த பொண்ணு இருக்கா. ரெண்டு பேரையும் பேலன்ஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சியாடா என கேட்டு, தர்ஷனுக்கு பளார் என அறைவிடுகிறார் ஈஸ்வரி. உனக்கு இந்த வயசுலயே ரெண்டு பொண்டாட்டி கேக்குதா என கேட்டு தர்ஷனை அடிவெளுக்கிறார் ஈஸ்வரி. பின்னர் அங்கிருந்த ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர் ஈஸ்வரியை சமாதானப்படுத்துகின்றனர். தர்ஷன் கண்ணீர்விட்டு அழுகிறார்.
ஈஸ்வரியிடம் கண்டிப்பாக உங்க புருஷனுக்கு தண்டனை வாங்கித் தருவேன் என சவால்விட்டுட்டு வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற ஜனனிக்கு, வில்லாதி வில்லன் இராவணன் ஆதிமுத்துவிடம் இருந்து போன் கால் வருகிறது. என்ன ஜனனி நீ உயிருக்கு உயிரா நினைச்ச ஈஸ்வரியும் உனக்கு எதிரா நிக்குறாங்க போல என கேட்க, யார் நீ என ஜனனி கேட்கிறார். அதன்பின்னர் தான் இராவணன் தன்னைப் பற்றி கூறுகிறார். இதையடுத்து தான் ஜனனிக்கு ஒவ்வொரு விஷயமாக நினைவுக்கு வருகிறது. அதெல்லாம் உன் வேலை தான் என கேட்கிறார்.
55
உடையும் உண்மைகள்
குறிப்பாக மதிவதினி மேம் கார்ல மைக் வச்சது, கேமரா வச்சது இதெல்லாம் நீ தானா என ஜனனி கேட்க, ஆம் என ஒத்துக் கொள்கிறார் ராவணன். ஆதி குணசேகரனை விட ஆபத்தானவனாக இருக்கும் இந்த ராவணனை தடுத்து நிறுத்த ஒரு வழி பண்ணியே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார் ஜனனி. அவர் ராவணன் யார் என்பதை கண்டுபிடித்தாரா? ஈஸ்வரிக்கு எல்லா உண்மைகளும் தெரியவருமா? அறிவுக்கரசியால் அரங்கேறப்போகும் திருப்பங்கள் என்னென்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.