This Week TRP Rating : தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வார வாரம் வெளியிடப்படும் நிலையில், 19-வது வாரத்தின் டாப் 10 சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டு உள்ளது.
சின்னத்திரை சீரியல்கள் தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் புதுமையாக இரண்டு தொடர்களை ஒன்றிணைத்து மகா சங்கமம், மெகா சங்கமம் என வேற லெவலில் ஹைப் ஏத்தி டிஆர்பி ரேட்டிங்கையும் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் பின்னடவை சந்தித்திருந்த சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்கள் இந்த வாரம் மளமளவென ஏற்றம் கண்டுள்ளன. 2026-ம் ஆண்டின் 19வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
25
டாப் 10 சீரியல் டிஆர்பி
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான் 10வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 4.16 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் சற்று ஏற்றம் கண்டு 4.58 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 9-ம் இடத்தில் இரண்டு சீரியல்கள் உள்ளன. அதில் ஒன்று விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல், மற்றொன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கார்த்திகை தீபம் சீரியல். இந்த இரண்டு சீரியல்களுக்குமே 4.99 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இதில் சின்ன மருமகள் சீரியல் கடந்த வாரம் 3.98 புள்ளிகளையும், கார்த்திகை தீபம் சீரியல் 4.40 புள்ளிகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
35
விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி
கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் விஜய் டிவியில் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் 8ம் இடத்தை பிடித்துள்ளன. கடந்த வாரம் இந்த மகா சங்கமத்திற்கு 5.09 புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் 5.61 புள்ளி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 7-வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நீடிக்கிறது. கடந்த வாரம் 5.48 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.20 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 6-ம் இடத்தில் அய்யனார் துணை சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5.93 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.75 புள்ளிகள் பெற்றிருந்தாலும் 6-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த வாரம் முதல் 5 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. கடந்த வாரம் 6.02 புள்ளிகள் உடன் 3ம் இடத்தில் இருந்த சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 6.99 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த சன் டிவியின் மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 4-ம் இடத்துக்கு தாவி உள்ளது. அந்த சீரியலுக்கு கடந்த வாரம் 5.86 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருந்தது. ஆனால் இந்த வாரம் 7.11 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் மாஸ் காட்டி வருகிறது.
55
முதலிடத்தில் மூன்று முடிச்சு
கடந்த வாரம் 6ம் இடத்தில் இருந்த அன்னம் மற்றும் செல்லமே செல்லமே சீரியல்களின் மகா சங்கமம், இந்த வாரம் மளமளவென முன்னேறி 3-ம் இடத்துக்கு சென்றுள்ளது. இந்த மகா சங்கமத்திற்கு கடந்த வாரம் 5.57 டிஆர்பியும், இந்த வாரம் 7.32 புள்ளிகளும் கிடைத்துள்ளன. வழக்கம்போல் முதல் இரண்டு இடங்களை கயல் மற்றும் மூன்று முடிச்சு சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் கயல் சீரியல் 8.00 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், மூன்று முடிச்சு சீரியல் 9.37 புள்ளிகள் உடன் முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.