Ethirneechal Thodargiradhu : தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணம் நடந்ததா? ஆதி குணசேகரன் வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்

Published : May 21, 2026, 08:39 AM IST

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவி வீட்டை விட்டு வெளியேறியதால், தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் நடந்ததா? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக எல்லா வேலைகளையும் செய்து வைத்து, கடைசியில் தாலி கட்டும் சமயத்தில் தனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் பார்கவி. அதுமட்டுமின்றி அவர் வீட்டை விட்டு செல்லும் முன்னர் அன்புக்கரசியை மணக்கோலத்தில் வீட்டுக்கு வர வைத்திருக்கிறார். அவருடன் அவருடைய அக்கா அறிவுக்கரசி, அண்ணன் முல்லை ஆகியோரும் வந்துள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்

25
ஆதி குணசேகரனின் முடிவு

பார்கவி வெளியேறியபோது அவரை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தார் ஜனனி. இதன்காரணமாக ஜனனி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஈஸ்வரி. மறுபுறம் அறிவுக்கரசி, ஆதி குணசேகரனிடம், என்ன மாமா, அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சுல்ல, அந்த பொண்ணே கல்யாணம் வேண்டாம்னு போயிட்டா, என் தங்கச்சி கழுத்துல உங்க மகனை தாலி கட்ட சொல்லுங்க என கூறுகிறார். ஆனால் ஆதி குணசேகரன் தந்திரமாக முடிவெடுத்து, இந்த கல்யாணம் பற்றி முடிவெடுக்குற அதிகாரம் இந்த வீட்டுல ஒரே ஆளுக்கு தான் இருக்கு. ஈஸ்வரி நீயே ஒரு முடிவெடுத்து சொல்லி என தன் மனைவி பக்கம் பிளேட்டை திருப்பி விடுகிறார்.

35
கல்யாணத்துக்கு நோ சொன்ன ஈஸ்வரி

செஞ்ச தப்பை எல்லாம் மறைத்து நாடகமாடும் அறிவுக்கரசி, ஈஸ்வரியிடம் சென்று தன் தங்கச்சியை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கோங்க என கெஞ்சுகிறார். என்மேல தப்பு இருக்கலாம், ஆனா என் தங்கச்சி என்ன பண்ணுனா, அவளைப் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க என சொல்ல, எதுவும் பதில் சொல்லாமல் குத்துக்கல் போல நிற்கிறார் ஈஸ்வரி. இதையடுத்து அவர் காலில் விழும் அறிவுக்கரசி, பளீச்சுன்னு அன்புக்கரசியை கல்யாணம் பண்ணிக்கோனு ஒரே போடா போட்டுரு என கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி, இப்போ நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன் என கூறிவிடுகிறார்.

45
ஈஸ்வரி - ஜனனி மோதல்

கல்யாணத்தை நிறுத்திய ஈஸ்வரியிடம், நீங்க எடுத்த முடிவு தப்பு அக்கா என ஜனனி சொல்ல, அதற்கு ஈஸ்வரி, தப்பா இருந்தாலும் அது என்னோட முடிவு என சொல்கிறார். அதன்பின் பதிலடி கொடுக்கும் ஜனனி, அதேமாதிரி தான் உங்க புருஷனுக்கு தண்டனை வாங்கி கொடுக்காம விடமாட்டேன், அது என் முடிவு என சவால்விடுகிறார். இதனால் மீண்டும் ஈஸ்வரி மற்றும் ஜனனி இடையே மோதல் முற்றிப் போய் உள்ளது.

55
அறிவுக்கரசியின் அடுத்த மூவ்

பார்கவி இல்லாததால் தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் நடக்க வாய்ப்பு இருப்பதாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஆதி குணசேகரன் தந்திரமாக காய் நகர்த்து, தன்னுடைய மனைவியிடம் முடிவெடுக்கும் உரிமையை ஒப்படைத்துவிட்டார். இதனால் ஈஸ்வரியும் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளார். அதனால் அறிவுக்கரசியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள, இனி வரும் எபிசோடுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories