Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!

Published : Jul 31, 2026, 09:11 AM IST

Siragadikka Aasai Serial 31 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ஆபரேஷன் நடக்க உள்ள விஷயத்தை விஜயாவிடம் போட்டுக் கொடுத்துள்ளார் ரோகிணி.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவின் உடல்நிலை விரைவில் குணமாக வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து, வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்து மீனா மனம் நெகிழ்கிறார். இதற்கிடையில், மீனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது, மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முத்து அழைக்கிறார். இருவரும் கிளம்பத் தயாராகும் நேரத்தில் விஜயா, தனது தோழிகள் மதிய உணவிற்கு வருவதாகவும், அவர்களுக்காக ஸ்பெஷல் விருந்து சமைக்க வேண்டும் என்றும் மீனாவிடம் கூறுகிறார்.

Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!

25
விஜயாவுக்கு டோஸ் கொடுத்த அண்ணாமலை

ஆனால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசரத்தை முத்து விளக்குகிறார். இதனால் விஜயா கோபப்பட, அண்ணாமலை குறுக்கிட்டு, முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும் என்றும், தற்போது வெளியே இருந்து உணவை வாங்கி விருந்தினர்களை கவனித்துக்கொள்ளுமாறு விஜயாவிடம் கூறி, முத்துவையும் மீனாவையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார் அண்ணாமலை. மருத்துவமனைக்கு சென்றதும், அறுவை சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆனால் பதற்றம் காரணமாக மீனாவின் ரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கிறது.

35
மீனா மருத்துவமனையில் அனுமதி

இதனால், முதலில் ரத்த அழுத்தம் சீராக வேண்டும்; அதன் பிறகே சிகிச்சையை தொடர முடியும் என்று மருத்துவர் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு முத்து பெரும் கவலையில் ஆழ்கிறார். அதே நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் ரோகிணி, அங்குள்ள செவிலியரிடம் விசாரித்து மீனாவின் உடல்நிலை குறித்து முழு விவரத்தையும் தெரிந்துகொள்கிறார். இதையடுத்து விஜயாவுக்கு போன் போடும் ரோகிணி, ஆஸ்பத்திரியில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னுவிடாமல் சொல்லி விடுகிறார். விஜயாவும், ரோகிணி எதுக்கு இதெல்லாம் சொல்கிறார் என்று யோசிக்காமல் அனைத்தையும் காது கொடுத்து கேட்கிறார்.

45
சதி செய்யும் ரோகிணி

இதோடு மட்டுமல்லாமல், "இந்த குடும்பத்திற்கு வாரிசு கொடுக்கக்கூடியவர் நான் மட்டுமே; மீனாவாலும் முடியாது, ஸ்ருதியும் அதற்கு தயாராக இல்லை. எனது குழந்தையை இந்த குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று மனதிற்குள் மகிழ்ச்சியுடன் நினைக்கிறார். மீனா மீது பாசத்தில் வந்திருப்பார் என்று பார்த்தால், முழு வன்மத்தோடு அங்கு வந்திருப்பது தெரியவருகிறது. இதன்மூலம் ரோகிணியின் உண்மையான முகமும் மீண்டும் வெளிப்படுகிறது. மனோஜ் உடன் எப்படியாவது சேர வேண்டும் என்பதற்காகவே ரோகிணி இதையெல்லாம் செய்கிறார்.

55
விஜயா என்ன முடிவு எடுக்கப்போகிறார்?

சில நாட்களாக ரோகிணி மாறிவிட்டார் என்று தோன்றிய நிலையில், அவர் இன்னும் பழைய சதித்திட்ட மனநிலையிலேயே இருப்பது இந்த காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மீனாவின் உடல்நிலை குறித்து விஜயாவுக்கும் தகவல் கிடைத்துள்ளதால், அடுத்து அவர் எப்படிப்பட்ட முடிவை எடுக்கப் போகிறார்? ரோகிணியின் திட்டம் வெற்றிபெறுமா? மீனாவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடைபெறுமா? மனோஜ் - ரோகிணி டைவர்ஸ் மேட்டர் என்ன ஆனது? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அடுத்த எபிசோடிற்காக காத்திருக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories