Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!

Published : Aug 08, 2026, 10:23 AM IST

Siragadikka Aasai Serial 08 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் நாச்சியார் பாட்டிக்கு மெமரி லாஸ் ஆனதால் விஜயாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நகர்ந்து வருகின்றன. இன்றைய எபிசோடில், சீதாவை அவரது வீட்டில் சேர்த்து விடுவதற்காக மீனா மற்றும் முத்து இருவரும் அருணின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு அருண் தனது தவறுகளை உணர்ந்தது போல அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். இதையடுத்து, மீனாவும் முத்துவும் அருணுக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்குகின்றனர். பின்னர் இருவரும் சீதாவை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்புகின்றனர்.

Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!

25
பாட்டி கேட்ட கேள்வி

இதற்கிடையில் வீட்டில் புதிய பிரச்சனை ஒன்று உருவாகிறது. பாட்டியை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், அவருக்கு பழைய விஷயங்கள் பலவும் மறந்துபோனது தெரிய வருகிறது. வீட்டில் மீனா மற்றும் சுருதி இருப்பதைப் பார்த்த பாட்டி, “இந்த இரண்டு பெண்கள் யார்? இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?” என்று அண்ணாமலையிடம் கேட்கிறார். பாட்டியின் கேள்வியால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர். அந்த நேரத்தில் முத்து சாமர்த்தியமாக நிலைமையை சமாளிக்க முயற்சி செய்கிறார்.

35
பொய் சொன்ன முத்து

மீனா மற்றும் சுருதி இருவரும் தனது அப்பாவின் நண்பருடைய மகள்கள் என்றும், அவர்கள் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருவதாக முத்து ஒரு கதையை உருவாக்கி சொல்கிறார். ஆனால் பாட்டி அடுத்தடுத்து கேள்விகளை கேட்க ஆரம்பித்ததும், முத்து சொல்லும் பொய்க்கு மேல் பொய் சேர்க்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதிலும், அந்த நண்பர் திருச்சியில் இருப்பதாக முத்து கூற, “அவர் திருச்சியில் இருந்தால் உனக்கு எப்படி நண்பராக இருக்கிறார்?” என பாட்டி கேள்வி எழுப்புகிறார். எப்படியோ சமாளித்து பாட்டியை நம்ப வைக்க முத்து முயற்சி செய்கிறார்.

ஹாஸ்டலில் இடம் கிடைக்காததால் மீனா மற்றும் சுருதி இருவரும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் அக்கா-தங்கை என்றும் முத்து மேலும் ஒரு கதையை கூறுகிறார். இதனால் வீட்டில் ஏற்கனவே இருக்கும் குழப்பம் இன்னும் அதிகரிக்கிறது.

45
விஜயாவுக்கு காத்திருக்கும் அடுத்த சோதனை!

இதற்கிடையில், பாட்டியின் வருகையால் அதிகமாக பாதிக்கப்படுவது விஜயாதான். வழக்கம்போல் வீட்டில் இருக்கும் வேலைகள் அனைத்தும் விஜயாவின் தலையில் விழத் தொடங்குகின்றன. காபி போட்டு கொடுத்தாலும், “இன்னும் உனக்கு காபி போடத் தெரியலையா?” என்று பாட்டி விஜயாவை கண்டிக்கிறார். இதைத்தொடர்ந்து சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளையும் விஜயாவிடம் ஒப்படைக்கத் தொடங்குகிறார். இதனால் விஜயா மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள அனைவருமே பாட்டியின் கேள்விகளுக்கும் கண்டிப்புக்கும் பயந்து நடந்துகொள்கிறார்கள்.

55
செம ட்விஸ்ட் வெயிட்டிங்

இனி பாட்டிக்கு பழைய நினைவுகள் முழுமையாக திரும்புமா? மீனா மற்றும் சுருதி பற்றிய உண்மை அவருக்கு தெரிய வருமா? முத்து சொல்லிய பொய்கள் எப்போது அம்பலமாகும்? குறிப்பாக விஜயாவை பாட்டி இன்னும் என்னென்ன பாடுபடுத்தப் போகிறார்? என்பதுதான் அடுத்தடுத்த எபிசோடுகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி பாட்டியின் அடுத்தடுத்த அதிரடிகளால் வீட்டில் என்னென்ன பிரச்சனைகள் வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories