Karthigai Deepam Serial 07 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கையும், ரேவதியை பிரிக்க முடிவெடுத்துள்ள சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியல், ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடிய சம்பவங்கள் அரங்கேற உள்ளன. கனடாவில் இருக்கும் ஈஸ்வரியுடன் ரோகிணி பேசும் போது, ரேவதியை அங்கு அழைத்து சென்று ஆறு மாதங்களுக்கு இந்தியா திரும்ப முடியாதபடி வைத்திருக்க வேண்டும் என்ற சாமுண்டீஸ்வரியின் ரகசிய திட்டம் தெரிய வருகிறது.
கார்த்திக்கிடம் இருந்து ரேவதியை முழுமையாகப் பிரிப்பதே இந்த முடிவின் நோக்கம் என்பதும் வெளிப்படுகிறது. இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரோகிணி, சாமுண்டீஸ்வரியிடம் விளக்கம் கேட்கிறார். ஆனால் தனது மகளின் வாழ்க்கை குறித்து முடிவு எடுப்பது தானே என்றும், யாரும் அதில் தலையிட வேண்டாம் என்றும் சாமுண்டீஸ்வரி கடுமையாக எச்சரிக்கிறார். மறுபுறம், கார்த்திக்கிடம் பேச வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் ரேவதி, தனது செல்போன் செயல்படாததால் அருகில் இருப்பவரின் மொபைலை பயன்படுத்தி அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்.
அதே நேரத்தில், சாமுண்டீஸ்வரியின் திட்டத்தை அறிந்த கார்த்திக், அவசரமாக விமான நிலையத்தை நோக்கி புறப்படுகிறார். ஆனால் வழியில் போலீஸ் வாகன சோதனையில் சிக்கிக்கொள்வதால், புதிய எண்ணில் இருந்து வரும் ரேவதியின் அழைப்பை ஏற்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. சோதனை முடிந்ததும், அந்த எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொள்ள கார்த்திக் முயற்சி செய்கிறார். ஆனால் அதற்குள் ரேவதி விமானத்தில் ஏறிச் சென்றுவிட்டதாக தெரிய வருகிறது. இதனால் இருவரும் சந்திக்காமல் பிரிந்து விடுவார்களா என்ற பதற்றம் அதிகரிக்கிறது.
ரேவதிக்கு எதிரான சாமுண்டீஸ்வரியின் திட்டம் வெற்றி பெறுமா? கார்த்திக் சரியான நேரத்தில் ரேவதியை சந்தித்து தடுக்க முயல்வாரா? அல்லது இந்த பயணம் அவர்களின் காதலில் புதிய பிரிவை உருவாக்குமா? சாமுண்டீஸ்வரியின் சதி அம்பலமாகுமா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய 'கார்த்திகை தீபம்' எபிசோடில் வெளியாகவுள்ளன. இந்த சீரியல் இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் டிஆர்பி ரேஸிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.