Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!

Published : Aug 07, 2026, 09:00 AM IST

Siragadikka Aasai Serial 07 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி, சத்யாவிடம் இனி நீங்க தான் கம்பெனியை பொறுப்பேற்று நடத்த வேண்டும் என கூறுகிறார்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், அருண் தனது தவறை உணர்ந்ததாக கூறி, சீதாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வருகிறார். ஆனால், தனது அக்கா மற்றும் மாமாவிடம் ஆலோசனை செய்து மட்டுமே எந்த முடிவையும் எடுப்பேன் என்று சீதா உறுதியாக கூறுகிறார். அதற்கு அருண், அவளது முடிவுக்காக காத்திருப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர், சீதா நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மீனாவிடம் பகிர்ந்து கொள்கிறார். இதையடுத்து, குடும்பத்தினருடன் பேசி சரியான முடிவு எடுக்கலாம் என்று மீனாவும் அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?

25
சத்யாவிடம் பொறுப்பை ஒப்படைக்கும் சிந்தாமணி

மறுபுறம், சிந்தாமணியும் ரேகாவின் தந்தையும் இணைந்து புதிய திட்டம் தீட்டுகின்றனர். ரேகாவும் சத்யாவும் தனியாக செல்லாமல், தங்களது வீட்டிலேயே தங்க வைத்து குடும்பத் தொழிலை கவனிக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. அப்போது ரேகாவும், சத்யாவும் தங்கள் துணி மணிகளுடன் அங்கு வந்துவிடுகிறார்கள். அப்போது சத்யாவிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார் சிந்தாமணி. ரேகா அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் இனி நீங்க தான் இந்த பிசினஸை கவனிச்சிக்கணும் என சொல்கிறார். சத்யாவும் வேறு வழியின்றி தொழிலை கவனிக்க சம்மதிக்கிறார்.

35
பாட்டியின் விசிட்டால் ஆடிப்போன விஜயா

இதற்கிடையில், முத்துவும் அண்ணாமலையும் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். பாட்டியை பார்த்து மகிழ்ச்சியுடன் பேசும் மீனாவை அவர் அடையாளம் காண முடியாமல், "நீ யார்?" என்று கேட்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதேபோல் ஸ்ருதியிடம் அதே கேள்வியை கேட்கும் நாச்சியார், விஜயாவை பார்த்து என்ன நீ 6 மாசத்துல இவ்வளவு குண்டாகிட்ட என கேட்கிறார். இப்படி நாச்சியார், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும், பழைய நினைவுகளின் அடிப்படையில் வேறு விதமாக அழைப்பதால் வீட்டில் குழப்பமான சூழல் உருவாகிறது.

45
நாச்சியாருக்கு என்ன ஆச்சு?

அப்போது நாச்சியாரை ரூமில் படுக்க வைத்துவிட்டு வரும் அண்ணாமலை, சமீப கால நினைவுகள் பாட்டிக்கு முற்றிலும் மறந்துவிட்டதாகவும், பல வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் மட்டுமே அவருக்கு தெளிவாக நியாபகம் இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் விளக்குகிறார். அதுமட்டுமின்றி மருத்துவரின் அறிவுரைப்படி, அவருக்கு எதையும் வலுக்கட்டாயமாக நினைவுபடுத்த முயற்சிக்காமல், இயல்பாக நினைவுகள் திரும்பும் வரை அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முத்து அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்.

55
மனம் மாறினாரா அருண்?

இறுதியில், முத்துவும் மீனாவும் அருணின் வீட்டிற்கு சென்று பேச முடிவு செய்கிறார்கள். இதற்காக சீதாவை அழைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் அருண் வீட்டிற்கு செல்கிறார்கள். அருணும் சீதாவை பார்த்ததும் சந்தோஷமாகி, முத்துவையும் மீனாவையும் வீட்டிற்குள் அழைத்து பேசுகிறார். அங்கு அருண் உண்மையாகவே மாறியிருக்கிறாரா அல்லது மீண்டும் ஏதாவது திட்டத்துடன் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நீடிக்கிறது. இந்த சந்திப்பு சீதாவின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது இனி வரும் எபிசோட்களில் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories