பிக் பாஸே மிரளும் அளவுக்கு சண்டைபோட்டு வெளியேறிய நந்தினிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Oct 11, 2025, 01:17 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருக்கும் நந்தினிக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Bigg Boss Nandhini Salary

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதற்குள் ஒரு போட்டியாளர் வெளியேறி இருக்கிறார். வழக்கமாக வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான ஓட்டு வாங்கிய போட்டியாளரை விஜய் சேதுபதி எலிமினேட் செய்வார். ஆனால் இந்தமுறை நிகழ்ச்சி தொடங்கிய ஐந்து நாளிலேயே தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை எனக்கூறி ஆர்.ஜே.நந்தினி பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது.

24
ஏன் வெளியேறினார் நந்தினி?

நந்தினி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதனால் யாரிடம் கோபத்தை காட்டுவது என தெரியாமல் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் பிடித்து கண்ணாபிண்ணானு திட்டிய அவரை யாராலும் தடுக்க முடியவில்லை. யார் வந்தாலும் ஆக்ரோஷமாக பேசத் தொடங்கியதால், அனைவரும் அவர் அருகில் செல்லவே பயந்தார்கள். இந்த வீட்டில் ரியாலிட்டி இல்லை, எல்லாரும் போலியா இருக்காங்க என்று சொல்லி கத்திய நந்தினியை பிக் பாஸ் கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பேசினார்.

34
கடுப்பான பிக் பாஸ்

வழக்கமாக இதுபோல் யாராவது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை வைத்தால், அவர்களை சமாதானப்படுத்த கொஞ்ச நேரம் ஆறுதலாக பேசுவார் பிக் பாஸ். ஆனால் நந்தினியிடம் ஏன் இந்த முடிவு என கேட்டதும், அவர் இங்கு எல்லாமே போலியா இருக்கு என சொன்னதால் பிக் பாஸே டென்ஷனாகி உடனடியாக அவரை வெளியே செல்லுமாரு கூறினார். இதனால் அங்குள்ள மற்றொரு கதவு வழியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நந்தினி.

44
நந்தினிக்கு சம்பளம் எவ்வளவு?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாப்புலராக இருக்கும் பிரபலங்களுக்கு தான் அதிகளவில் சம்பளம் வழங்கப்படும். இங்கு வந்து பாப்புலர் ஆகும் முனைப்போடு வரும் புதுமுகங்களுக்கு இருப்பதிலேயே கம்மி சம்பளமாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அந்த வகையில் நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் தங்கி இருந்த ஐந்து நாட்களுக்கு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். பிக் பாஸ் வரலாற்றிலேயே மிக கம்மியான சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவராக நந்தினி மாறி இருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories