ஒரு பெண் தான் குணசேகரனுக்கு அந்த லெட்டரை எழுதி இருக்கிறார். அதில் அவர், இந்த லெட்டரை நான் எழுதும்போது மணி ராத்திரி 2.30, அக்டோபர் மாதம் 18ந் தேதி, வருடம் 1990. இப்போ இங்கே ராமேஸ்வரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரித்து அழிச்சுட்டு இருக்கு. என் மனசும் அதேபோல் தான் உள்ளது. இந்த லெட்டர் உனக்கு கிடைக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். பாக்கி மிச்சம் எதுவும் இல்லைனு சந்தோஷப்படாத. அப்படியே மிச்சம் இருந்தாலும் பேப்பர் மட்டும்தானே... அது காலப்போக்கில் அழிஞ்சு போயிடும்னு நினைக்காத. நீ விட்டுட்டு போனது வெறும் பேப்பர் இல்ல, ஒரு விதை. அந்த விதை நாளைக்கு ருக்ஷமா வந்து, அதோடு கிளைகள் உன்னோட கழுத்தை நெரிக்கும்.
உன்னை மட்டுமல்ல, உன்னுடைய தாய், உன் தம்பிகள், உன் தங்கச்சி, பிள்ளைங்க, பேரன், பேத்திங்கனு உன்னுடைய வம்சத்தையே அழிச்சு, உன்னை நிர்மூலம் ஆக்கிடும். இப்போ எல்லாம் அழிஞ்சிடுச்சுனு நினைச்சுட்டு இருக்க, ஒரு காலம் வரும், அப்போ நீ... அய்யய்யோ விட்டுட்டோமே, ஏமாந்துட்டோமேனு நினைப்ப. அன்னைக்கு உனக்கு தெரியும், நீ பண்ணிய பாவம், உன்னை துரத்தி வரும்” என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.