இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... திருந்தாத அருணுக்கு சீதா கொடுத்த பதிலடி - சிறகடிக்க ஆசை

Published : Oct 11, 2025, 09:39 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கடையை முத்து தான் மீட்டுக் கொடுத்தார் என்கிற உண்மை அறிந்த சீதா, வீட்டுக்கு வந்து அருணிடம் செம சண்டை போட்டிருக்கிறார்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கோவில் வாசலில் வைத்திருந்த பூக்கடையை சிந்தாமணி ஆட்களை வைத்து தூக்கிய நிலையில், அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய முத்து, போலீஸ் கமிஷனரின் உதவியோடு, லஞ்சம் வாங்கிய அதிகாரியை பிடித்து தன்னுடைய மாமியார் மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்ததோடு, மீனாவின் அம்மா மீண்டும் அதே இடத்தில் பூக்கடை போட உதவி இருந்தார். ஆனால் இதெல்லாம் செய்தது அருண் தான் என நினைத்து மீனாவின் அம்மா அவரிடம் நன்றி தெரிவிக்க, அவரும் எதையும் சொல்லாமல் தான் செய்தது போலவே பில்டப் கொடுத்திருந்தார்.

24
அருண் மீது கோபத்தில் சீதா

இந்த நிலையில் ஸ்ருதி புதிதாக திறந்துள்ள உணவகத்தின் திறப்பு விழாவுக்கு வந்த கமிஷனரின் மனைவி, மீனாவிடம், முத்து தான் உன்னுடைய அம்மா கடையை மீட்டு கொடுத்ததாக சொல்கிறார். அப்போது இதை அருகில் இருந்த சீதாவும் கேட்டுவிடுகிறார். பின்னர் முத்துவிடம் மீனாவின் அம்மா நன்றி தெரிவிக்கிறார். இருப்பினும் தன்னுடைய கணவர் அருண் மீது செம கோபத்தில் இருக்கும் சீதா, வீட்டுக்கு வந்த அருணிடம் ஏன்கிட்ட ஏன் பொய் சொன்னீங்க என கேட்கிறார். என்னோட அம்மாவோட கடை நீங்க சொல்லி தான் திரும்ப வந்துச்சா என கேட்க, அதற்கு அருண் ஆமாம் என சொல்கிறார்.

34
முத்துவை இழிவாக பேசிய அருண்

நான் கமிஷனரிடம் லெட்டர் கொடுத்ததால் தான் கடை திரும்ப வந்ததாக அருண் சொல்ல, சீதா நடந்த உண்மையை கூறுகிறார். இதையடுத்து பேசும் அருண், நானும் முயற்சி செய்தேன், உங்க மாமாவும் முயற்சி பண்ணியிருக்காரு. நான் கொடுத்த லெட்டர வச்சு தான் அவங்க கடையை கொண்டு வந்து வச்சாங்கனு நினைச்சேன். இப்போ நான் என்ன சொல்லனும், அந்த முத்து சொல்லி தான் உங்க அம்மா கடைய வச்சாங்கனு சொல்லனுமா என அருண் காட்டமாக கேட்க, அதற்கு சீதா, ஒருத்தர் வேலையை இழிவா பேசாதீங்க என சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

44
அம்மா வீட்டுக்கு வந்த சீதா

ஒரு கட்டத்தில் முத்து மேல் உள்ள வன்மத்தை கொட்டத் தொடங்கிய அருண், அவன் ஒரு ரெளடி, அவனோடு என்னை ஒப்பிட்டு பேசாதே, அவனெல்லாம் என்னோட ஷுவில் உள்ள தூசிக்கு சமம். எனக்கு பிடிக்காதவங்க கூட நீயும் பேசக்கூடாது என அருண் சொல்ல, அதனால் டென்ஷன் ஆன சீதா, கோபித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். பின்னர் அங்கு வந்த மீனா, சீதாவை சாமாதானப்படுத்தி, எவ்வளவு கோபமாக இருந்தாலும் இப்படியா வருவது என புத்திமதி சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories