எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவி மற்றும் தர்ஷனை வீட்டுக்கு அழைத்து வந்த ஜனனி, ஆதி குணசேகரனிடம் டம்மி போனை காட்டி மிரட்டி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவி திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஜனனி, அவர்களை ஜோடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் வாங்க வைத்தார். ஆனால் கண்விழிக்காமல் கோமா நிலையிலேயே இருக்கும் ஈஸ்வரியின் உடல்நிலை பற்றி மருத்துவரும் ஒரு அதிர்ச்சி அப்டேட்டை கொடுக்கிறார். கடந்த இரு தினங்களாக அவரின் உடல் டிரீட்மெண்டுக்கு ஒத்துழைக்கவில்லை என டாக்டர் சொன்னதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். தர்ஷனும், ஜனனியும் கண்ணீர்விட்டு அழுதனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
வீட்டுக்கு வந்த தர்ஷன்
தர்ஷனையும், பார்கவியையும் வீட்டுக்கு அழைத்து வருகிறார் ஜனனி. வீட்டு வாசலில் கால் வைக்கும் முன்னரே அரிவாள் வந்து விழுகிறது. யாராச்சும் வீட்டுக்குள் வந்தால் கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டுவிடுவேன் என மிரட்டுகிறார் கதிர். அவரிடம் சக்தியும், ஜனனியும் வாக்குவாதம் செய்கிறார்கள். தர்ஷனை பெத்தவரு வந்து சொல்லட்டும் நாங்க போறோம் என்று ஜனனி சொல்ல, அப்போது அங்கு வரும் ஆதி குணசேகரனிடம் ஜனனி ஒரு டீலிங் பேசுகிறார். இதையடுத்து அவர்கள் அனைவரையும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கிறார் ஆதி குணசேகரன். அப்படி ஜனனி என்ன சொன்னார் தெரியுமா?
34
ஜனனி போட்ட கண்டிஷன்
ஒன்னத்துக்கும் உதவாத டம்மி போனை காட்டி மிரட்டி தர்ஷனுக்கும், பார்கவிக்கும் திருமணத்தையே நடத்தி முடித்த ஜனனி, தற்போது அதேபோனை வைத்து மீண்டும் ஆதி குணசேகரனை மடக்கி இருக்கிறார். அந்த போனில் ஒன்றுமே இல்லை என்பதை அறியாத குணசேகரன், தன்னுடைய பீரோவில் இருந்த முக்கியமான லெட்டரையும் ஜனனி தான் தூக்கி இருப்பார் என சந்தேகப்பட்டு, அவரிடம், என் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கொடுத்துவிடு என கேட்க, அதற்கு ஜனனி, எது வேண்டுமானாலும் எதிர்த்து நின்று தான் போராடனும், நீங்கள் கேட்டதை கொடுக்க எனக்கு ஒரு வாரம் டைம் வேண்டும் என கேட்கிறார்.
தன்னிடம் இல்லாத ஆதாரத்தை இருப்பதாக காட்டி ஆதி குணசேகரனை மிரட்டி வரும் ஜனனி, கேமராமேன் கெவினின் நண்பனை பிடித்து அவனிடம் இருக்கும் ஆதாரத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என பிளான் போட்டு இருக்கிறார். அதற்காக தான் குணசேகரனிடம் ஒரு வாரம் டைம் கேட்டு இருக்கிறார். அந்த ஆதாரம் ஜனனியின் கையில் சிக்குமா? குணசேகரனிடம் ஒரு வாரத்திற்கு அனைத்தையும் ஜனனி ஒப்படைப்பாரா? தர்ஷன் - பார்கவி அடுத்து என்ன சவால்களை சந்திக்கப் போகிறார்கள். சக்தியிடம் உள்ள லெட்டர் விவகாரம் எப்போது வெடிக்கு? போன்றவற்றிற்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.