Meena Support Father In Law Family : பால் காய்ச்சும் விழாவில் தனது அம்மா பால் காய்ச்ச வேண்டாம் என்று கூறிய மீனா, அத்தையை பால் காய்ச்ச செய்துள்ளார். ஏன் அப்படி செய்தார் என்பது பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா முழுவதுமாக தனது மாமனார், மாமியார் குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் செந்தில் மட்டும் தனது குடும்பத்திலிருந்து விலகி மாமனாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அப்பா, அம்மாவை பிடிக்காத செந்திலுக்கு இப்போது மாமனார், மாமியாரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் மீது பாசத்தை பொழிய ஆரம்பித்துவிட்டார்.
மீனாவிற்கு அரசு விடுதி கொடுத்திருப்பதையும், அதனை மீனா வேண்டாம் என்று சொல்வதையும் கூட அவரது மாமனாரிடம் சொல்லி, இதைப் பற்றி மீனாவிடம் பேசுங்கள் என்றார். மேலும், தனக்கு தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அதற்கு மீனா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறி வந்தார். இந்த சூழலில் தான், இப்போது தனிக்குடித்தனம் சென்றுவிட்டர். வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்டியன் இப்போது பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு வந்து பரிசாக பணமும் கொடுத்துள்ளார். ஆனால், எவ்வளவு என்பது பற்றி குறிப்பிடவில்லை.
36
மாமனார் வீடு
அரசு வேலை பார்க்கும் மீனாவிற்கு அரசு விடுதி கொடுக்கப்பட்ட நிலையில் அதனை வாங்கி அங்கு செல்ல வேண்டும் என்று செந்தில் ஒற்றைக் காலில் நின்று இப்போது தனிக்குடித்தனமும் சென்றுவிட்டார். பாண்டியன் ஸ்டொர்ஸ் 2 சீரியலில் இன்றைய 608ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் மீனா தங்களது வீட்டில் பால் காய்ச்சினர். முதலில் பாண்டியன் வராத நிலையில் பாய் காய்ச்சும் நேரத்திற்கு வந்துவிட்டார். மீனா அவரது அத்தை கோமதியை பால் காய்ச்ச சொன்னார். ஆனால், அவரோ மீனாவின் அம்மாவை பால் காய்ச்ச சொன்னார். ஆனால், மீனா, அதெல்லாம் வேண்டாம், நீங்களே காய்ச்சுங்கள் அத்தை என்றார்.
அதன் பின்னர் தான் கோமதி பால் காய்ச்சினார். இதைத் தொடர்ந்து குழலி, கதிர் ஆகியோர் பரிசுகளை கொடுக்க சரவணன் தன் பங்கிற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், பழனிவேல் மட்டும் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், சுகன்யா ஆத்திரமடைந்தார். மேலும், சரவணனிடம் தனியாக பேசிய தங்கமயில் இது போன்று தங்களுக்கும் ஒரு அரசு விடுதி (Quarters) யில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
56
செந்தில் மற்றும் மீனா
இதைப் புரிந்து கொண்ட சரவணன், அதற்கு நீங்கள் தான் எம் ஏ முடித்துவிட்டீர்கள். அதனால், அரசு வேலை வாங்கினால், அவர்கள் கொடுக்கும் போது நாம் அப்படியே தனிக்குடித்தனம் செல்லலாம் என்றார். இறுதியாக பழனிவேல் மற்றும் சுகன்யா இருவரும் தனியாக சந்தித்து பேசி தங்களது வருத்தத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும், பழனிவேலுவிற்கு அவரது அண்ணன்கள் தனியாக ஒரு மளிகை கடை வைத்துக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். பழனிவேலுவும் இப்போது கடையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு அண்ணன்கள் வைத்துக் கொடுக்கும் கடைக்கு சென்றுவிடுவார் என்று தெரிகிறது.
66
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியனும் இப்போது கதிரின் பாண்டியன் டிராவல்ஸிற்கு வந்து செல்லும் நிலையில் இனி வரும் காலங்களில் மாணிக்கம் மற்றும் பாக்கியம் இருவரும் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை சரவணனுக்கோ அல்லது தங்கமயில் பெயருக்கோ எழுதி கொடுக்கும் நிலை ஏற்படும். அப்படி நடக்கும் சூழலில் பாண்டியன் நடுத்தெருவிற்கு வருவதோடு கதிர் மற்றும் ராஜீயின் கடையை கவனித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.