சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது, மூன்று முடிச்சு ஆகிய நான்கு சீரியல் ரசிகர்களுக்கும் ஒரு குட் நியூஸ் காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையில் சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வரும் சேனல்கள் என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி தான். நகரப்புரங்களில் விஜய் டிவியை தான் அதிகப்படியான மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் சன் டிவி கிராமப்புர மக்களை கவர்ந்துள்ளதால், அதற்கு டிஆர்பி ரேட்டிங் அதிகம் கிடைக்கிறது. இதன் காரணமாக தான் டிஆர்பி ரேஸில் சன் டிவி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. விஜய் டிவி என்னவெல்லாம் செய்கிறதோ, அதை சன் டிவியும் தொடர்ச்சியாக காப்பியடித்து வருகிறது.
24
சீரியல் சங்கமம்
அந்த வகையில், சின்னத்திரை சீரியல்களில் புதிய முயற்சியாக இரண்டு சீரியல்களை ஒரே கதைக்களத்தில் கொண்டு வந்து மகா சங்கமம் என விஜய் டிவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தது. அது ஹிட் அடித்ததால் அதை காப்பியடித்த சன் டிவி, அண்மையில் அதற்கு ஒரு படி மேலே போய் மெகா சங்கமம் என ஆரம்பித்து நடத்தி வருகிறது சன் டிவி. இந்த மெகா சங்கமத்தில் கயல், அன்னம் மற்றும் மருமகள் ஆகிய மூன்று சீரியல்களை ஒன்றிணைத்து ஒன்றரை மணிநேரம் ஒரு திரைப்படம் போல் ஒளிபரப்பி வருகிறது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
34
சன் டிவியின் புதிய அறிவிப்பு
இந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட முயற்சியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல்களை டிவியில் ஒளிபரப்பாகும் முன்பே ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக சன் டிவி அறிவித்து உள்ளது. அதன்படி முதற்கட்டமாக கயல், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது, மூன்று முடிச்சு ஆகிய நான்கு சீரியல்களை மட்டும் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னரே தினந்தோறும் பிற்பகல் 12 மணிக்கு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் சன் நெக்ஸ்ட் ஓடிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.
ஆனால் சன் டிவி, இதையும் விஜய் டிவியை பார்த்து தான் காப்பியடித்து இருக்கிறது. விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாகவே சீரியல்கள் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னரே ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிவிடும். தினந்தோறும் காலை 6 மணிக்கே அனைத்து சீரியல்களும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கிவிடும். விஜய் டிவியைத் தொடர்ந்து சன் டிவியும் அந்த ஸ்ட்ராட்டஜியை தற்போது பாலோ பண்ண தொடங்கி உள்ளது. அக்டோபர் 10-ந் தேதி முதல் சன் டிவி கயல், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது, மூன்று முடிச்சு ஆகிய சீரியல்களை பிற்பகல் 12 மணிக்கு ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.