சக்தியிடம் சிக்கும் வீடியோ... காசு கொடுத்து கதையை முடிக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்

Published : Feb 13, 2026, 01:25 PM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கு சக்தி, ஆதி குணசேகரனிடம் இருந்து 25 லட்சம் பணம் வாங்கி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode Highlights

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை பொய் சாட்சி சொல்லி மாட்டிவிட்ட அமுதாவை ஒரு கும்பல் திட்டமிட்டு பேசவைத்து கொலை செய்த வீடியோ தன்னிடம் இருப்பதாக அமுதாவின் கணவர் சக்தியிடம் சொன்ன நிலையில், அந்த வீடியோவை தன்னிடம் கொடுத்தால் 25 லட்சம் தருகிறேன் என டீல் பேசி இருந்தார் சக்தி. அதற்கு அமுதாவின் கணவரும் ஓகே சொல்ல, அந்த பணத்தை ரெடி பண்ண வீட்டுக்கு கிளம்பிய சக்தி, அங்கிருந்த தன்னுடைய அண்ணன் ஆதி குணசேகரனிடம் பணம் கேட்டிருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சக்திக்கு ஆதி குணசேகரன் போடும் கண்டிஷன்

சக்தியிடம் பேசும் குணசேகரன், எவனாவது உன்கிட்ட வந்து இவர் சொல்லி தான் ஜனனியை கடத்துனோம்னு சொன்னானா என கேட்பதோடு, எப்ப பார்த்தாலும் என்மேலயே பழியை போடுறீங்களே என கூறுகிறார். இதையடுத்து பேசும் சக்தி, எனக்கு இப்போ பணம் வேண்டும், அதுவும் கடனா தான் வேணும் என கேட்கிறார். உங்ககிட்ட வாக்குவாதம் பண்ண எனக்கு நேரம் இல்ல என சக்தி சொல்ல, சரி நான் வாக்குவாதம் பண்ணல, உனக்கு காசு கொடுக்குறேன். ஆனால் நான் கேட்கும் சில விஷயங்களை நீ பண்ண வேண்டும் என குணசேகரன் சொல்கிறார். சரி உங்களுக்கு என்ன தான் வேணும் என சக்தி கேட்கிறார்.

35
பணம் கொடுக்க சம்மதித்த குணசேகரன்.

உடனே அருகில் இருந்த விசாலாட்சி, சக்தி அவன் சொல்றதுக்கெல்லாம் ஏன் தலையாட்டிக்கிட்டு இருக்க என கேட்பதோடு, இந்த சொத்துல உனக்கும் பங்கு இருக்கு, உனக்கு சேர வேண்டியதை கேட்டு வாங்கிக்கோ என சொல்கிறார். அதெல்லாம் எனக்கு வேண்டாம் என சொல்லும் சக்தி, இப்போதைக்கு கடனா கொடுத்தா போதும் என கூறுகிறார். உனக்கு எப்போ காசு வேண்டும் என குணசேகரன் கேட்க, சக்தி 1 மணிக்கு வேண்டும் என சொல்கிறார். பின்னர் ஞானத்தை அனுப்பி பேங்கில் இருந்து பணத்தை எடுத்து வரச் சொல்கிறார் குணசேகரன். அதோடு ஆடிட்டரிடம் டாக்குமெண்ட் ரெடி பண்ண சொல்லிருக்கேன் அதையும் வாங்கிட்டு வரச் சொல்கிறார். இன்னைக்கு மொத்தமா செட்டில் பண்ணிடலாம் என கூறுகிறார்.

45
ஜோசியர் சொன்ன ஷாக்கிங் தகவல்

இதன்பின்னர் ஜோசியர் ஒருவரை வீட்டிற்கு வர வைத்திருக்கிறார் குணசேகரன். அந்த நபர், வீட்டில் உள்ள பெண்களைப் பார்த்து இந்த வீட்டில் இருந்த ஒரு ஜீவன் உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு இப்போ ஓடிக்கிட்டு இருக்கு என சொல்கிறார். அந்த பெண்ணுக்கு யாரால் ஆபத்து வந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீர்களோ அவர்களால் அவளுக்கு எந்த ஆபத்தும் இல்ல. அதைத்தாண்டி ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கிறாள். இந்த வீட்டிற்கு வந்த மருமகள்கள் நான்கு தலைமுறையா உங்க முன்னோர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. நீங்க எல்லோரும் சேர்ந்து ராமேஸ்வரத்துக்கு போய் திதி கொடுத்தால் ரொம்ப நல்லது. அதை முதலில் முடிச்சிட்டு அப்புறமா மற்ற பிரச்சனைகளை பாருங்க என சொல்கிறார்.

55
சக்தி கையில் சிக்கிய வீடியோ

இதையடுத்து மாடியில் தன்னுடைய ரூமில் உள்ள பேக்கை எடுத்து வரச் சொல்கிறார் குணசேகரன். பின்னர் சக்தியை அழைத்து, அந்த பணத்தை அவரிடம் கொடுக்கிறார். இதன்பின்னர் சக்தி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அமுதாவின் கணவர் சொன்ன இடத்துக்கு செல்கிறார். அவரிடம் பணத்தை கொடுக்கும் முன்னர் வீடியோவை தன்னிடம் கொடுக்குமாறு கேட்கிறார். பின்னர் அவர் ஒரு காட்டுப் பகுதிக்குள் சக்தியை அழைத்து சென்று, அவரிடம் ரகசிய இடத்தில் புதைத்து வைத்திருந்த செல்போனை எடுத்து வீடியோவை கொடுக்கிறார். அந்த வீடியோவை பார்த்து சக்தி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. அந்த வீடியோவை வைத்து சக்தி, ஜனனியை மீட்டாரா? ஜனனியும், மதிவதினியும் என்ன ஆனார்கள்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories