பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் மற்றும் சரவணனின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்மயிலை விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கும் சரவணனுக்கு முன்னாள் காதலியான அஞ்சலி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கோவிலில் சந்தித்துக் கொண்டதை அடுத்து, அஞ்சலி தனக்கு விவாகரத்தான விஷயத்தை சொன்னதும் அவரின் போன் நம்பரை வாங்கிவிட்டார் சரவணன். பின்னர் இருவரும் கடலை போட தொடங்கி இருக்கிறார்கள். காதலர்கள் போல இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்கிறார். இந்த நிலையில் சரவணனின் டைவர்ஸ் கேஸ் விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
கோர்ட்டுக்கு செல்லும் சரவணன்
சரவணன் கோர்ட்டுக்கு கிளம்புகிறார். அப்போது பாண்டியனுக்கு கடையில் முக்கியமான வேலை வருகிறது. அதனால் பழனியிடம் நீ சரவணனோடு கோர்ட்டுக்கு போயிட்டு வர்றியா என கேட்கிறார். உடனே கோமதி, ஏண்டா உனக்கு மட்டும் கடையில்லையா, நீ சரவணன் கூட கோர்ட்டுக்கு போனேன்னா, உன்னோட அண்ணனுங்க என்னென்ன சொல்லுவாங்கனு எனக்கு தெரியும். அதனால் நீ கோர்ட்டுக்கு போக வேண்டாம். நானே போயிட்டு வர்றேன்னு சொல்கிறார் கோமதி. அதற்கு பாண்டியனும் சரி நீயே போயிட்டு வா என கூறுகிறார். இதையடுத்து சரவணனோடு கிளம்பி கோர்ட்டுக்கு செல்கிறார் கோமதி.
35
விசாரணைக்கு வரும் டைவர்ஸ் கேஸ்
அதே நேரத்தில் தங்கமயிலின் குடும்பமும் கோர்ட்டுக்கு கிளம்பி வருகிறார்கள். சரவணனும், கோமதியும் கோர்டுக்கு செல்ல, அவர்களுக்கு முன்னதாகவே செந்தில் வக்கீலோடு காத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் தங்கமயில் அவருடைய அப்பா, அம்மா உடன் கோர்ட்டுக்கு வருகிறார். வந்த உடனே அங்கு நிற்கும் சரவணன் அருகே சென்று நிற்கிறார் தங்கமயில். ஆனால் சரவணன் பேசாமல் கோர்ட்டுக்குள் சென்றுவிடுகிறார். பின்னர் இவர்களின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி இதுவரை என்ன நடந்தது என்பதை கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
தங்கமயிலின் குடும்பம் அடுக்கடுக்கான பொய்களை சொன்னது கோர்ட்டில் நிரூபனம் ஆகியிருப்பதாலும், அவர்கள் சாட்சியோடு சிக்கிக் கொண்டதாலும் இனிமேல் அவர்களால் வாதாடி இந்த விவாகரத்து வழக்கில் ஜெயிக்க முடியாது. தங்கமயிலும் நான் சரவணன் மாமாவோடு தான் சேர்ந்து வாழ்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் தரப்பு வக்கீல், சரவணன் வீட்டில் தங்கமயிலை ரொம்ப கொடுமைப்படுத்தியதாக சொல்கிறார். அதற்கு நீதிபதி, அதான் கொடுமைப்படுத்துறாங்கனு சொல்றீங்களே, அப்புறம் எதுக்கு சேர்ந்து வாழணும்னு சொல்றீங்க என கேட்கிறார்.
55
சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சரவணன் நல்லவர் தான், அவருடைய குடும்பத்தார் தான் தங்கமயிலை கொடுமைப்படுத்துகிறார்கள் என வக்கீல் வாய்கூசாமல் பொய் சொல்கிறார். இதையடுத்து சாட்சி சொல்ல வரும் சரவணன், வாயை திறந்தாலே பொய் தான் சொல்றா அதனால இவகூட என்னால வாழ முடியாது. எனக்கு டைவர்ஸ் தான் வேணும் என கூறுகிறார் சரவணன். மறுபுறம் தங்கமயில், நான் அவர் கூட தான் வாழுவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இப்படி இருவரும் எதிரும் புதிருமாக இருப்பதால், நீதிபதி கேஸை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கிறார். சீக்கிரமா டைவர்ஸ் கிடைச்சிட்டா இந்த கேஸ் முடிந்துவிடும் என்கிற ஆசையில் இருந்தார் சரவணன், அதில் மண்ணை அள்ளிப்போட்டிருக்கிறார் தங்கமயில். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.