சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் மவுசு இருப்பதால் தற்போது சீசன் 1, சீசன் 2 என சில சீரியல்கள் சீசன் வாரியாக நீண்டு கொண்டு செல்கின்றன. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலும் தற்போது 2-வது சீசனில் நகர்ந்து வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதற்கு முக்கிய காரணம் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி என்றே சொல்லலாம்.
சிபு சூர்யன்
பாரதி கண்ணம்மா சீசன் 2-வில் வினுஷா நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக பாரதி கேரக்டரில், சிபு சூர்யன் என்பவர் நடித்து வருகிறார். மேலும் ரூபாஸ்ரீ, தீபா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது தான் இந்த சீரியல் படிப்படியாக பிக் அப் ஆகத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், அதில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரியங்கா தாஸ், சாய் ரித்து
பாரதி கண்ணம்மா 2 சீரியலில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா தாஸ் என்பவர் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதால், அவருக்கு பதில் சாய் ரித்து என்பவர் அஞ்சலியாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சீரியல் ஆரம்பிச்சு ஒரு மாதமே ஆகும் நிலையில், நடிகை ஒருவர் விலகி இருப்பது பேசு பொருள் ஆகி உள்ளது. அவர் எதற்காக விலகினார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...Gopi sudhakar : கோபி, சுதாகரின் யூடியூப் சேனலுக்கு தடையா?... வடக்கன்ஸ் வீடியோவால் கிளம்பிய புது சிக்கல்