இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'.
ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில், இதுவரை பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, சத்யப்ரியா,விபு ராமன், கமலேஷ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வாசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷ்ணவி, கடந்த வாரம்தன்னுடைய பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடிய நிலையில், தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது குறித்த புகைப்படங்களையும், தன்னுடைய காதலருடன் இருக்கும் சில புகைப்படங்களையும், வைஷ்ணவி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட, பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாக பிரபலங்கள் தங்களுடைய காதலர்களை திருமண நேரத்தில் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதால், வைஷ்ணவிக்கும் விரைவில் திருமணமா? என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.