Karthigai Deepam : சந்திரகலாவை பளார் என அறைந்த ரேவதி... துப்பாக்கியால் மிரட்டிய சாமுண்டீஸ்வரி!

Published : Aug 13, 2026, 01:03 PM IST

Karthigai Deepam Serial 13 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில், அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

PREV
14
Karthigai Deepam Serial Today Episode

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். அடுத்தடுத்து அரங்கேறும் எதிர்பாராத திருப்பங்களால் சீரியல் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரேவதி எடுத்த அதிரடி முடிவால் குடும்பத்தில் மிகப்பெரிய பரபரப்பு உருவாகிறது. வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கும் ரேவதியை எப்படியாவது தடுத்து நிறுத்த சாமுண்டீஸ்வரி முயற்சி செய்கிறார். ஆனால் ரேவதி தனது முடிவில் இருந்து பின்வாங்க மறுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் சாமுண்டீஸ்வரி, திடீரென துப்பாக்கியை கையில் எடுத்து, தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார்.

Karthigai Deepam : ரேவதியின் கேள்விகளால் ஆடிப்போன சாமுண்டீஸ்வரி... மறைக்கப்பட்ட காதல் ரகசியம் அம்பலம்

24
மிரட்டலுக்கு பயப்படாத ரேவதி

ஆனால் இந்த மிரட்டலுக்கும் ரேவதி பயப்படவில்லை. தனது வாழ்க்கையை தானே பார்த்துக்கொள்வதாக திட்டவட்டமாக கூறி, சாமுண்டீஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் போகிறது. இதற்கிடையில், ரேவதியை வீட்டை விட்டு செல்லவிடாமல் தடுக்க சந்திரகலாவும் முயற்சி செய்கிறாள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த ரேவதி, சந்திரகலாவை எதிர்பாராத விதமாக அறைந்துவிடுகிறாள். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

34
சோகத்தில் மூழ்கும் குடும்பம்

ரேவதி வீட்டை விட்டு சென்றதால் குடும்பமே சோகத்தில் மூழ்குகிறது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் ரேவதியைப் பற்றி தொடர்ந்து குற்றம் சாட்டுகிறாள். பெற்ற தாயையே மதிக்காமல் ரேவதி சென்றுவிட்டதாக கூறி, ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரியின் மனதில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறாள். இதன் விளைவாக கார்த்திக் மீதான சாமுண்டீஸ்வரியின் கோபமும் அதிகரிக்கிறது. மறுபுறம், முத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். இந்த விசாரணையின் மூலம் அடுத்ததாக என்ன உண்மை வெளியாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உருவாகிறது.

44
ரேவதிக்காக காத்திருக்கும் கார்த்திக்

இந்நிலையில், கோவிலில் ரேவதியை சந்திக்க கார்த்திக் காத்திருக்கிறான். அங்கு வரும் ரேவதியிடம், இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய காரணம் என்ன என்று கேட்கிறான். அதற்கு, தனது அம்மா செய்து வரும் செயல்கள் எதுவுமே தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்று ரேவதி மனம் திறந்து பேசுகிறாள். பின்னர் இருவரும் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசிக்கின்றனர். புதிதாக கட்டப்பட்டு வரும் கே.ஆர். இல்லத்தில் சென்று தங்கலாம் என்று ரேவதி கூறுகிறாள். ஆனால் அந்த யோசனையில் கார்த்திக்கிற்கு தயக்கம் ஏற்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் பாட்டி வீட்டிற்குச் சென்று தங்கலாம் என்று ரேவதி முடிவு செய்கிறாள்.

அடுத்தது என்ன?

ரேவதி எடுத்திருக்கும் இந்த புதிய முடிவு கார்த்திக் - ரேவதி வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? மகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர சாமுண்டீஸ்வரி என்ன செய்யப் போகிறார்? சந்திரகலாவின் அடுத்த திட்டம் என்ன? முத்துவிடம் போலீஸ் நடத்தும் விசாரணையில் முக்கியமான தகவல் ஏதேனும் வெளியாகுமா? இப்படியாக அடுத்தடுத்த திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்ந்து வருகிறது கார்த்திகை தீபம் சீரியல். இதற்கான விடைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியலை காணத் தவறாதீர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories