Siragadikka Aasai : சத்யாவுக்கு எம்.டி பதவி... கிரிஷின் கேள்விகளால் மயங்கி விழுந்த மனோஜ்..!

Published : Aug 13, 2026, 11:00 AM IST

Siragadikka Aasai Serial 13 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவுக்கு ஆபிஸில் எம்.டி பதவி கிடைத்துள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்களை சிரிக்கவும், எதிர்பார்ப்பில் காத்திருக்கவும் வைக்கும் வகையில் அமையவுள்ளன. கிரிஷ், மனோஜ் மற்றும் ஜீவாவிடம் தொடர்ந்து கேள்விகளை கேட்டு துளைத்தெடுக்கிறார். கிரிஷின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருவரும் திணறிக்கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ரோகிணியிடமும் கிரிஷை தனியாக சமாளிக்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள்.

Siragadikka Aasai : முத்து, மீனாவிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த மனோஜ்... கிரிஷ் உடன் வந்து பிளாக்மெயில் பண்ணும் ரோகிணி

25
எம்.டி ஆன சத்யா

இதற்கிடையில் சத்யா அலுவலகத்திற்கு வருகிறார். ரேகாவின் அப்பா வகித்த முக்கிய பொறுப்பில் சத்யாவை அமர வைக்க முடிவு செய்யப்படுகிறது. இதன்படி, எம்.டி. இருக்கையில் சத்யா அமர்கிறார். இதைப் பார்த்த ரேகா மிகவும் உற்சாகமாகி சத்யாவுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். சத்யாவுக்கு கிடைத்த இந்த உயர்வை பார்த்து அலுவலக ஊழியர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். “இங்க வேலைக்கு வந்தவன், இப்போது ஓனர் பொண்ணையே கல்யாணம் பண்ணி ஓனராகவே மாறிட்டானே” என்று சத்யாவின் வளர்ச்சியைப் பற்றி கிண்டலாக பேசுகின்றனர்.

35
கிரிஷை அழைத்து செல்லும் ரோகிணி

அதே நேரத்தில் கிரிஷை அழைத்துச் செல்ல ரோகிணி முயற்சி செய்யும்போது, மனோஜும் ஜீவாவும் மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். ஆனால் கிரிஷோ எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் கிரிஷை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ரோகிணி கவலைப்படுகிறார். இதன் பின்னர், முத்துவை சந்திக்க மீனா கார் பார்க்கிங் பகுதிக்கு வருகிறார். முத்து வரச் சொன்னதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது, அங்கு சத்யா காரில் வந்து இறங்குகிறார்.

45
காரில் வந்த சத்யா

வந்ததும் முக்கியமான விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். இதனால் முத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் மீனாவிடம் மட்டும் சற்று தயக்கம் காணப்படுகிறது. பின்னர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால் சத்யாவுக்கு வேறு ஒருவருடன் முக்கியமான மீட்டிங் இருப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். இதனால் அனைவரும் வேறு ஒரு நாளில் சந்தித்து சாப்பிடலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

55
மீனாவை மடக்கிய பாட்டி

இதற்கிடையில் மொட்டை மாடியில் முத்துவும் மீனாவும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டதாக முத்து மகிழ்ச்சியுடன் மீனாவிடம் கூறுகிறார். இருவரும் சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென பாட்டி அங்கு வந்து விடுகிறார். முத்து, மீனா இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்த பாட்டி, மீனாவை பிடித்து கேள்வி கேட்கத் தொடங்குகிறார். இதனால் அடுத்ததாக என்ன பிரச்சனை வெடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முத்துவின் சந்தோஷம் அடுத்த நிமிடமே பிரச்சனையாக மாறுமா? பாட்டி மீனாவிடம் என்ன கேட்கப்போகிறார்? கிரிஷின் கேள்விகளால் ரோகிணிக்கு மேலும் சிக்கல் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories