Pandian Stores 2 Serial Today Sep 24 Episode 594 in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 594ஆவது எபிசோடானது சுகன்யாவின் காட்சிகளுடன் தொடங்கி பாண்டியனின் காட்சிகளுடன் முடிந்துள்ளது.
பாண்டியனின் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் ஒரு வழியாக தனது கனவை நிறைவேற்றியுள்ளார். டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்பது தான் கதிரின் நீண்ட நாள் ஆசை. அதனை அப்பா பாண்டியன் கொடுத்த ரூ.10 லட்சம் கொண்டு டிராவல்ஸ் வைத்துள்ளார். இது பாண்டியனுக்கு எல்லையில்லா ஆனந்தத்தை அளித்தது. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 594ஆவது எபிசொடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய எபிசோடு சுகன்யாவின் காட்சிகளுடன் தொடங்கியது. அதில், அவர் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது கணவர் பற்றி ஆஹா ஓஹோ என்று பேச, அந்த நேரம் பார்த்து பழனிவேல் அங்கு வந்துள்ளார். இதனால், தான் சொன்னது எல்லாம் பொய் என்ற நிலைக்கு சுகன்யா வந்துள்ளார்.
26
பழனிவேலுவை திட்டி தீர்த்தார்
இதனால், பழனிவேலுவை திட்டி தீர்த்தார். இது ஒரு புறம் இருந்தாலும் அடுத்ததாக, கதிர் மற்றும் ராஜீ தொடர்னா காட்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், முதல் புக்கிங் வந்தது. இதைக் கேட்டு இருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து கதிரின் ஃப்ரண்ட் வந்தார். அவரைப் பார்த்து லவ்வர்ஸ்க்கு இடையில் குறுக்கே வந்ததால், ராஜீ கொஞ்சம் கோபப்பட்டார்.
சரி ஃப்ரண்டை கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு ரொமான்ஸ் செய்யலாம் என்று ஆசையோடு இருந்த ராஜீக்கு கடைசியில் ஏமாற்றமே இருந்தது. கதிரும் அவருடன் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து தங்கமயில் மற்றும் அவருடைய பெற்றோர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பங்கேற்றுள்ளனர்.
டிராவல்ஸ் திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் அப்படியே சம்பந்தி வீட்டிற்கும் வந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு முடித்துள்ளனர். பின்னர் பாண்டியனிடம் டிராவல்ஸில் ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று தங்கமயிலின் அப்பா மாணிக்கம் கேட்க, அதற்கு பாண்டியன் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறான். இப்போது வேலைக்கு ஆட்கள் தேவைப்படுமா இல்லையா என்பது பற்றி ஒன்றும் தெரியாது.
56
மாணிக்கம் மற்றும் தங்கமயில்
அதனால், நீங்கள் என்னுடைய கடைக்கு வந்துருங்க. அங்க ஆட்கள் தேவைப்படுகிறது என்று சொல்ல, மாணிக்கத்திற்கு ஒரே குஷி. ஆனால், இது தங்கமயிலுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அப்பா மாணிக்கம் இதுவரையில் எந்த வேலைக்கும் சென்றதில்லை. அதனால், மாமனார் கடையில் அவரால் வேலை பார்க்க முடியாது என்று அவருடன் வாக்குவாதம் செய்தார்.
இந்த சூழலில் தான் மாணிக்கம் இன்று பாண்டியன் கடை எப்படி இருக்கிறது என்று பார்க்க வந்தார். அவருக்கு கூல்டிரிங்க்ஸ் கொடுக்கப்பட்டது. அப்போதுதான் சரவணனுக்கு உண்மை தெரியும். உன்னுடைய மாமனார் இங்கு தான் வேலைக்கு வரப் போகிறார் என்று சொல்ல, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன், என்னப்பா அவர் எப்படி வேலை பார்ப்பார். இது சரியாக வருமா என்று கேட்டார். என்ன செய்ய, குமரேஷன் வேறு ஊருக்கு போய்விட்டார். எப்போது வருவார் என்று தெரியவில்லை. கடைக்கு ஆள் தேவை. அதனால், தான் அவரை வேலைக்கு வரச் சொன்னேன். சரி என்ன பண்ணுறது. போக போக தானே எப்படி வேலை பார்ப்பார் என்று தெரியும் என்றார்.