புருஷன் கூடவே இல்ல... நீ எப்படி கர்ப்பமான? தங்கமயில் மீது மீனாவுக்கு வந்த சந்தேகம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Published : Mar 02, 2026, 12:06 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாக்கியத்திற்கு தெரியவந்ததை அடுத்து அவர் முக்கிய முடிவு எடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன், தங்கமயில் ஜோடி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாரா ட்விஸ்டாக தங்கமயில் கர்ப்பமாகி இருக்கிறார். அவர் மீனாவின் தோழி வீட்டில் இருக்கும் போது வாந்தி எடுத்திருக்கிறார். பின்னர் மீனாவுக்கு போன் போட்டு வரச் சொல்லி தனக்கு தலை சுற்றுவதாகவும், வாந்தி வருவதாகவும் கூற, அப்போ நீ கர்ப்பமா இருக்கியா என கேட்கிறார் மீனா. சரி எதுக்கு ஹாஸ்பிட்டல்ல போய் செக் பண்ணிருவோம் என இருவரும் கிளம்பி மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அப்போது டாக்டர் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

25
மீனாவுக்கு வந்த டவுட்

கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தங்கமயில், மீனாவை கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். பின்னர் இருவரும் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், மீனா தங்கமயிலிடம், அக்கா எனக்கு ஒரு டவுட், ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தீங்க, அதுக்கு இடையில எப்படி இதெல்லாம் என கேட்க, அதற்கு தயங்கி தயங்கி பதிலளித்த தங்கமயில், பெரிய சண்டையெல்லாம் வர்றதுக்கு முன்னாடி நடந்தது என கூறுகிறார் தங்கமயில். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு என்மேல் உள்ள கோபம் போயிடும் தான என கேட்கிறா மயில். அதற்கு மீனாவும் கண்டிப்பா உன்னை மன்னிச்சிடுவாங்க என கூறுகிறார்.

35
பாக்கியத்திடம் கர்ப்பமாக இருப்பதை சொன்ன தங்கமயில்

பின்னர் இந்த சந்தோஷமாக விஷயத்தை சொல்ல தங்கமயிலின் வீட்டிற்கு இருவரும் செல்கிறார்கள். அங்கு முதலில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார் மீனா. அப்போது என்ன விஷேசம் என தங்கமயிலிம் அப்பா கேட்க, அவரது அம்மா, இவ வேலை பாக்குற இடத்துல மாசம் முடியுறதுக்கு முன்னாடியே சம்பளத்தை கொடுத்துட்டாங்களா என கேட்க, அதன்பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சொல்கிறார் தங்கமயில். அதைக்கேட்டதும், ஏற்கனவே நீ இப்படி சொல்லி தான் பிரச்சனை வந்துச்சு. அதைமாதிரி இப்பவும் பொய் சொல்றியா என கேட்கிறார் பாக்கியம்.

45
சரவணனிடம் சொல்ல கிளம்பும் மயில்

அதெல்லாம் இல்லை, டாக்டரிடம் செக் பண்ணிட்டு தான் வர்றோம், மயில் இரண்டு மாசம் கர்ப்பமாக இருக்கா என சொன்னதும் பூரித்துப் போன பாக்கியம், சரி உடனே உன்னோட துணிமணியெல்லாம் எடுத்துட்டு கிளம்பு என சொன்னதும். எதுக்கு என மீனா கேட்க, அவளை அவளுடைய மாமனார் வீட்டில் விட்டுட்டு வரப்போறேன் என கூறுகிறார். அதற்கு தங்கமயில் முதலில் நான் இதை சரவணன் மாமா கிட்ட சொல்லுறேன். அதுக்கப்புறம் வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார். அப்போ நீ இன்னும் மாப்பிள்ளைகிட்ட சொல்லவே இல்லையா, உடனே போன் போட்டு சொல்லு என பாக்கியம் கூறுகிறார்.

55
செந்திலை லஞ்சம் வாங்க தூண்டும் மாமனார்

அதற்கு தங்கமயில், நான் நேரில் தான் சொல்லப்போறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபுறம் செந்தில் தன்னுடைய மாமனார் வீட்டுக்கு செல்கிறார். அங்கு மீனாவின் அப்பா, ஒரு சொத்து விஷயமாக பேசுகிறார். தன்னிடம் பணம் இல்லை என செந்தில் சொன்னதும், எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு உங்க டிபார்ட்மெண்டின் மூலம் ஒரு வேலை முடியவேண்டி இருக்கிறது. அவரிடம் லஞ்சம் வாங்கிட்டு வேலையை முடிச்சு கொடுத்தீங்கனா, உங்களால் அந்த இடத்தை வாங்கிட முடியும் என சொல்ல, செந்திலும் யோசிக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories