Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலை நேரில் சந்தித்து அவருடன் சண்டை போட்டுள்ளார் சரவணன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலின் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும், அவரின் மருத்துவ செலவுக்காகவும் பாண்டியன் பணத்தை கொடுத்துட்டு வரச்சொல்ல, கோமதியும் அதற்காக சென்றிருந்தார். ஆனால் அவர் போன நேரத்தில் மயில் வீட்டில் இல்லாததால் அவரின் அம்மாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு திரும்பிவிட்டார் கோமதி. இதையடுத்து வீட்டுக்கு வந்த மயில், அந்த பணத்தோடு பாண்டியன் வீட்டுக்கு வந்து, வாசலிலேயே நின்றபடி கோமதியை அழைத்து அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு சென்றார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்று கதிர் மற்றும் ராஜி இருவரும் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களை பார்த்ததும் காந்திமதி வந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தன் மகன் முத்துவேலுக்காக நீ செய்த உதவிக்கு நன்றி என கதிரிடம் கூறுகிறார் காந்திமதி. அப்போது உங்க மகன் பார்க்க தான் டெரரா இருக்காரு, ஆனால் ஆஸ்பத்திரியில் எதுக்கெடுத்தாலும் பயப்படுறாரு என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து சக்திவேல் அங்கு வருகிறார். அவர் காந்திமதி, கதிர் மற்றும் ராஜி உடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து முறைத்துக் கொண்டே வீட்டுக்குள் செல்கிறார்.
35
செந்தில் போட்ட பட்ஜெட் கணக்கு
மறுபுறம் மீனாவும் செந்திலும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது வீட்டின் வரவு செலவு பற்றி பேசுகிறார் செந்தில். நேத்து நைட் ஏன் ரொம்ப நேரம் முழிச்சிருந்த என மீனா கேட்க, தான் வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார் செந்தில். நம்ம இருவரும் போன மாசம் எக்குத்தப்பா செலவு பண்ணிருக்கோம். கரெண்ட் பில் மட்டும் 2 ஆயிரம் ரூபா வந்திருக்கு என செந்தில் சொல்ல, நீ போற இடமெல்லாம் ஃபேனை போட்டுட்டு அமத்தாம போயிடுற, அப்புறம் இவ்வளவு கரெண்ட் பில் வராம என்ன பண்ணும் என திட்டுகிறார் மீனா. அதனால் கப் சிப் ஆகிறார் செந்தில்.
இதையடுத்து பாண்டியன் கடையில் இருக்கும்போது அரசி மீது பைக்கால் மோதிய கார்த்திகேயன் என்பவர் வருகிறார். அவர் பாண்டியனிடம் தான் சிறுதானியத்தில் செய்த ஸ்நாக்ஸுகளை கொடுத்து இதை உங்கள் கடையில் வையுங்கள் என கொடுக்கிறார். அதற்கு பாண்டியன் இதெல்லாம் விற்காது நீங்க எடுத்துட்டு போங்க என சொல்ல, அவரிடம் பிரையின் வாஷ் செய்யும் விதமாக பேசும் கார்த்திகேயன், இந்த பொருட்கள் விற்கவில்லை என்றால் மூன்று நாட்களில் நானே எடுத்துக் கொள்கிறேன் என கூறுகிறார். அதற்கு பாண்டியனும் ஓகே சொல்லிவிடுகிறார்.
55
மயிலிடம் சண்டைபோட்ட சரவணன்
இறுதியாக சரவணன், தங்கமயிலை சந்தித்து பேசுகிறார். அப்போது தங்கமயிலிடம் எங்க அம்மா கொடுத்த காசை திருப்பி கொடுக்குற உனக்கு அவ்வளவு திமிரா என கேட்கிறார். அதுமட்டுமின்றி அந்த பணம் உனக்கு கொடுக்கல உன் வயித்துல வளர்ற என்னோட குழந்தைக்காக கொடுத்தேன் என சொல்கிறார். இப்போ தான் அது உங்க குழந்தைன்னு தெரியுதா, அன்னைக்கு அது யார் குழந்தையோனு சொன்னீங்க என மயில் கேட்க, அது கோபத்துல சொன்னேன் என கூறும் சரவணன், நீ குழந்தை பெத்த உடனே அதை எங்க வீட்டுக்கு தூக்கிட்டு வந்து நான் தான் வளர்ப்பேன். உன்னை மாதிரி ஆளிடம் அந்த குழந்தை வளரக்கூடாது. வளர விடமாட்டேன் என சவால்விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் சரவணன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.