
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன்னுடைய காரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை சவாரி ஏற்றி சென்றிருந்தார். செல்லும் வழியில் அந்த பெண்ணின் அம்மா கடைக்கு போக வேண்டும் என நிறுத்தியதால், காரில் தனியாக இருந்த அந்தப் பெண், கடகடவென இறங்கி, வேறொரு ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுவிடுகிறார். அதன்பின்னர் அந்த பெண்ணை காணவில்லை என முத்துவும், அந்த பெண்ணின் அம்மாவும் வலைவீசி தேடுகின்றனர். அவர் ஆட்டோவில் சென்றதை பார்த்த முத்து சேஸ் பண்ணி செல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேராக மனோஜின் ஷோரூமிற்கு செல்கிறார். அங்கு சென்று நிறைய பொருள் வாங்க வந்திருப்பதாக சொன்னதும், அவருக்கு ஆப்பிள் ஜூஸ் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் மனோஜ். பின்னர் பொருட்களை ஒவ்வொன்றாக காட்ட, தனக்கு 4 பிரிட்ஜ், 10 டிவி வேண்டும் என ஆர்டர் போட்ட அவர், மனோஜ் பில் போட சென்ற கேப்பில் அங்கிருந்து ஜூஸை குடித்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். பின்னர் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த பெண்ணை முத்து எப்படியோ கண்டுபிடித்து அவரின் அம்மாவிடம் ஒப்படைத்துவிடுகிறார்.
மறுபுறம் மனோஜ், 5 லட்ச ரூபாய்க்கு பொருள் கேட்டுவிட்டு காணாமல் போன பொண்ணை தேடி கடையின் வாசலிலேயே நின்று கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து ரோகிணி கடைக்கு வருகிறார். வந்ததும் முதல் வேலையாக கடையில் உள்ள சிசிடிவியை ஆஃப் பண்ண சொல்லும் ரோகிணி உள்ளே சென்றதும் மனோஜிடம், உங்க அம்மா என்னை அவமானப்படுத்தியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. நீ என்ன பண்ணுவியோ தெரியாது, உங்க அம்மாவை என்னிடம் மன்னிப்பு கேட்க வை என கண்டிஷன் போடுகிறார். அதற்கு மனோஜ், அவங்களுக்கு பதில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என சமாளிக்க, கோபித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் ரோகிணி.
இதையடுத்து விஜயா வேலைக்கு இண்டர்வியூ அட்டன் பண்ண ஒரு இடத்துக்கு செல்கிறார். அங்கு போய் ஒரு பெண்ணிடம் இங்கு 50 ஆயிரம் கொடுப்பாங்களா என விஜயா கேட்க, அவரோ உங்களுக்கு இருப்ப அனுபவத்துக்கு 1 லட்சம் கொடுப்பாங்க என கிண்டலாக சொல்ல, அதை உண்மை என நம்பி உள்ளே செல்கிறார் விஜயா. பின்னர் தான் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. விஜயாவை இண்டர்வியூ எடுக்க மீனா வருகிறார். இதைப்பார்த்ததும் விஜயா ஷாக் ஆகிறார். அவர் விஜயாவிடம் உங்களுக்கு இந்த வேலை செட் ஆகாது அத்தை நீங்க போங்க என சொல்கிறார்.
ஏன் நான் உன்னை விட நிறையா சம்பாதிச்சிடுவேன்னு பொறாமையா என விஜயா கேட்க, அதற்கு மீனா, அத்தை இங்க டான்ஸ் சொல்லிக்கொடுக்க வர்றவங்களுக்கு சம்பளமே கிடையாது. இது எங்க சங்கத்து உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இலவசமா டான்ஸ் சொல்லிக்கொடுக்க தான் ஆள் எடுக்குறோம். வர்றவங்களுக்கு சம்பளமெல்லாம் கிடையாது, டீ-யும் பிஸ்கட்டும் தான் தருவோம் என மீனா கூற, அதைக்கேட்டு ஷாக் ஆன விஜயா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
இறுதியாக ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிற்குள் ஒரு பெண் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார். அது வேறுயாருமில்லை நீத்து தான். அங்கு அமர்ந்து லெமன் டீ ஒன்றை ஆர்டர் பண்ணுகிறார். அப்போது மனசுக்குள்ளேயே பேசிக்கொள்ளும் நீத்து, ரவியை என் கிட்டவே வரவிட மாட்டேங்குறேல்ல, இந்த ஹோட்டல் இருக்குறதால தான ரவியை உன் பக்கத்துலயே வச்சிருக்க, அந்த முத்து, மீனாவை வச்சு என்னை அசிங்கப்படுத்தீட்ட, உன் ஹோட்டலை குளோஸ் பண்ண வக்கிறேன் டி, ரவியையும் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் என பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ரவி. நேராக ஸ்ருதியிடம் சென்று அவருக்கு உணவு ஊட்டி விடுகிறார். இதைப்பார்த்த நீத்துவுக்கு வயிறு எரிகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது. நீத்து என்ன பிரச்சனையை கொண்டுவரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.