Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போனதற்கு ஜனனி தான் காரணம் என குற்றம்சாட்டி இருக்கிறார் ஈஸ்வரி.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி போன் போட்டு அழைத்ததால் அவருடைய வீட்டுக்கு கிளம்பி சென்றார் தர்ஷினி. ஆனால் வீட்டில் உள்ளவர்களிடம் தான் ஹாஸ்டலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருந்தார். தர்ஷினி காரில் செல்லும் போது இடையே ஏறிய இரண்டு பெண்கள் அவர் முகத்தில் மயக்க மருந்து தடவிய கர்சிப்பை வைத்து அமுக்கியதால் அவர் மயக்கமடைந்துவிட்டார். இதையடுத்து தர்ஷினியை அவர்கள் காரில் கடத்திச் சென்றுவிட்டனர். யார் தர்ஷினியை கடத்தினார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தர்ஷினி காணாமல் போனதால் பதற்றம் அடைந்த ஜனனி, சக்தி உடன் சேர்ந்து அவரை தேடி வருகிறார். மறுபுறம் வீட்டில் இருக்கும் ஈஸ்வரி தர்ஷினிக்கு போன் போகாததால், அவருடைய தோழிக்கு போன் போட்டு கேட்க, அவரோ தர்ஷினி ஹாஸ்டலுக்கு வரவே இல்லை என சொல்லிவிடுகிறார். இதனால் அனைவரும் பதறிப்போய் இருக்க, அந்த நேரத்தில் கரிகாலன் அங்கு வந்து, தர்ஷினி, ஹாஸ்டலுக்கு செல்லவில்லை, அவ அவளோட சித்தி வீட்டுக்கு போயிருக்கா, அவ ஜனனி கிட்ட போன்ல பேசுனதை நான் ஒட்டுக்கேட்டேன் என கூறுகிறார்.
35
மாட்டிக்கொண்ட ஜனனி
இதையடுத்து ஜனனிக்கு போன் போடும் நந்தினி, தர்ஷினி அங்கயா இருக்கா என கேட்க, ஜனனியும் ஆமாம் என பொய் சொல்லிவிடுகிறார். அப்போது அருகில் இருந்த சக்தி எதுக்காக பொய் சொன்ன, என கேட்க, நம்ம காலைக்குள் அவளை கண்டுபிடித்துவிடலாம் என சொல்லி, இரவு முழுக்க தர்ஷினியை வலைவீசி தேடுகிறார்கள். எங்கு தேடியும் தர்ஷினி கிடைக்கவில்லை. இதையடுத்து காலையில் ஜனனி, சக்தி இருவரும் ஈஸ்வரி வீட்டுக்கே செல்கிறார். அங்கு சென்று தர்ஷினி காணாமல் போன விஷயத்தை சொல்லிவிடுகிறார்கள்.
அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, நீங்க ரெண்டு பேரும் தான் என் பொண்ணை கடத்தி வச்சிருக்கீங்க என சந்தேகப்படுகிறார். சக்தி எவ்வளவோ சொல்லியும் அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் ஈஸ்வரி இல்லை. நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது இன்னைக்கு பொழுது சாயிறதுக்குள்ள என்னோட பொண்ணு இங்க வரணும், இல்லேனா வேற ஒரு ஈஸ்வரியை பார்ப்பீங்க என எச்சரிக்கிறார். நாங்க சொல்றத கேளுங்க என சக்தி கெஞ்சி கேட்டும் அதை காதுகொடுத்து கேட்க மறுக்கிறார் ஈஸ்வரி.
55
தர்ஷினிக்கு என்ன ஆச்சு?
மறுபுறம் ஆதி குணசேகரன், என் பொண்ணை கொண்டுவந்து இப்போ நிப்பாட்டு என ஒரே போடாக போடுகிறார். இப்படி இருவரும் புரியாமல் பேசிக் கொண்டிருக்க, ஜனனி வேறு வழியின்றி தன் வயிற்றில் வளரும் பிள்ளை மீது சத்தியம் செய்து, நான் அவளை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்ப்பேன் என கூறிவிட்டு செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? தர்ஷினியை தேடி கண்டுபிடித்தாரா ஜனனி? தர்ஷினியை கடத்தியது யார் என்பது தெரிந்ததா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.