Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Published : May 25, 2026, 09:39 AM IST

Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் சரவணனை சந்தித்து நறுக்கென ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலும், சரவணனும் பிரிந்து வாழ்ந்து வருகின்றன. இந்த சூழலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார். அவர் கர்ப்பான விஷயம் தெரிந்ததும் உன் வயித்துல வளர்றது யாரோட குழந்தைனு கேட்டு அவரை அசிங்கப்படுத்திவிட்டார் சரவணன், இதனால் அவரை விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்திருந்தார் தங்கமயில். அதுமட்டுமின்றி அவர் மீனாவின் தோழி வீட்டில் வேலை செய்து நன்கு சம்பாதித்தும் வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்

25
தங்கமயில் வீட்டிற்கு செல்லும் கோமதி

தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் சூழலில் கோமதி அவரை பார்க்க செல்லாமல் இருக்க, அவரை அழைத்து, ஒரு குழந்தையை பெற்றெடுக்க எம்புட்டு செலவு இருக்கும். அதையெல்லாம் நீ யோசிக்க மாட்டியா என சொல்லும் பாண்டியன், அவரிடம் பணம் கொடுத்து, அந்த புள்ளைய பார்த்து விசாரிச்சிட்டு, அவளுக்கு செலவுக்கு பணம் கொடுத்துட்டு வா என சொல்லி அனுப்பிவிடுகிறார். இதையடுத்து கோமதி ஆட்டோவில் கிளம்பி தங்கமயில் வீட்டிற்கு செல்கிறார். ஆனால் அவர் சென்ற நேரத்தில் அங்கு தங்கமயில் இல்லை. அவரது அம்மா மட்டுமே இருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி

35
பணத்தை கொடுத்துவிட்டு சென்ற கோமதி

ஏற்கனவே பாக்கியத்திற்கும், கோமதிக்கும் ஆகாது. இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் தங்கமயில் வீட்டில் இல்லாததால், அவளுடைய பிரசவ செலவுக்கு இந்த காசை வச்சிக்கோங்க என சொல்லிவிட்டு டேபிளில் பணத்தை வைத்துவிட்டு கிளம்புகிறார் கோமதி. அவர் ஆட்டோவில் ஏறிச் செல்ல அந்த நேரம் பார்த்து தங்கமயில் வீட்டிற்குள் வருகிறார். பணத்தாசை பிடித்த பாக்கியம், கோமதி வைத்துச் சென்ற பணத்தை எடுத்துக்கொள்கிறார். அப்போது தங்கமயில் உள்ளே வர அவர் பணத்தை மறைத்து வைக்கிறார்.

45
பணத்தை திருப்பிகொடுத்த தங்கமயில்

பாக்கியத்திடம் அத்தை எதுக்கு வந்தாங்க என தங்கமயில் கேட்க, ஏதேதோ சொல்லி மழுப்புகிறார் பாக்கியம். அப்போது அத்தை ஏதாவது பணம் கொடுத்தாங்களா என தங்கமயில் கேட்க, இல்லை என பொய் சொல்கிறார் பாக்கியம். பின்னர் அவர் கையில் இருக்கும் பணம் யாருடையது என மயில் துருவி துருவி கேட்க, வேறுவழியின்றி உண்மையை சொல்லிவிடுகிறார் பாக்கியம். இதையடுத்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கோமதி வீட்டிற்கு செல்லும் மயில், இந்த பணம் எனக்கும் என் குழந்தைக்கும் வேண்டாம், நீங்களே இந்த பணத்தை வச்சிக்கோங்க, என் குழந்தையை எப்படி வளர்க்கணும்னு எனக்கு நல்லா தெரியும் என கூறி பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார்.

55
சரவணனுக்கு ஷாக் கொடுத்த தங்கமயில்

மறுதினம் தங்கமயில் வேலைக்கு செல்லும் போது அவரை தடுத்து நிறுத்தி பேசும் சரவணன், மயிலு அந்த பணம் ஒன்னும் உனக்கு கொடுத்தது கிடையாது. என் குழந்தைக்கு கொடுத்த பணம் என சொல்கிறார். அதற்கு தங்கமயில், அதான் இது உங்க குழந்தை இல்லேனு சொல்லிட்டீங்களே, அப்புறம் எதுக்கு உங்க பணம் மட்டும் எங்களுக்கு வேணும், அதான் நான் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன் என கூறுகிறார். இதனால் வாயடைத்துப் போகிறார் சரவணன். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories